ராமேஸ்வரத்தை தொடர்ந்து 21 நாகை மீனவர்கள் "மிஸ்ஸிங்"

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

தங்கள் கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களைக் கைது செய்யுமாறு இலங்கைகடற்படைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி ராமேஸ்வரம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள்பயங்கரமான தாக்குதலை நடத்தி அவர்களில் 76 பேரைக் கடத்திச் சென்றனர். இது நடந்து மறுநாளேமேலும் 42 மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கடத்தல் சம்பவங்கள்நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில் நேற்று மாலை நாகப்பட்டினம் அருகே உள்ள கடல் பகுதியிலிருந்து 21 மீனவர்கள்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலைக்குள் கரைக்குத் திரும்பியிருக்கவேண்டும். ஆனால் இதுவரை திரும்பவில்லை.

இந்த 21 மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் அல்லது இலங்கை கடற்படையினர்தான் பிடித்துச்சென்றிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டரிடம் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் புகார்கொடுத்துள்ளனர். மீனவர்களைத் தேடும் பணியும் துவங்கியுள்ளது.

93 தமிழக மீனவர்கள் திரும்பினர்:

இதற்கிடையே இலங்கைக்குக் கடத்தப்பட்ட 117 தமிழக மீனவர்களில் 93 பேர் விடுவிக்கப்பட்டுஇன்று மாலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கையின் தலைமன்னாரில் விடுதலை செய்யப்பட்ட அவர்களைக் கொண்டு வர படகுகள்தேவை என்று ராமேஸ்வரம் மீனவர்களிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் படகுதர மறுத்து விட்டனர்.

இதையடுத்து கடலோரக் காவல்படையைச் சேர்ந்த ஒரு கப்பல் தலைமன்னார் நோக்கி விரைந்தது.தலைமன்னார் கடல் பகுதியில் 93 தமிழக மீனவர்களையும் இந்திய கடலோர காவல்படைஅதிகாரிகளிடம் இலங்கை கடற்கடை ஒப்படைத்தது.

பின்னர் அந்தக் கப்பல் மூலம் 93 மீனவர்கள் இன்று மாலை பத்திரமாக ராமேஸ்வரம் திரும்பினர்.எஞ்சிய 24 தமிழக மீனவர்களை விடுவிக்கும் முயற்சியிலும் அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகஅதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் நாளை பந்த்:

இதற்கிடையே இலங்கையில் சிக்கியுள்ள எஞ்சிய தமிழக மீனவர்களையும் படகுகளையும் மீட்கவலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் முழு அடைப்பு நடத்துகின்றனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 மீனவர்களும், 30 படகுகளும் உடனடியாக மீட்கப்படவேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்:

முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் செல்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ள இந்தக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாகவாஜ்பாய்க்கு ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில்,

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும்அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

கச்சத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்கள் அதிகம் இருப்பதால் அங்கு மட்டுமே நம்மீனவர்களால் மீன் பிடிக்க முடியும். அதை வைத்துத்தான் அவர்களது தினசரி வாழ்க்கையே நடந்துவருகிறது.

இலங்கையில் போர்நிறுத்தத்திற்குப் பிறகு வட இலங்கை பகுதியில் மீன்பிடிக்க அந்நாட்டுமீனவர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் பிறகுதான் இலங்கை மீனவர்கள்தமிழக மீனவர்களைக் கடத்துவதும் தாக்குவதுமாக உள்ளனர்.

இது மிகவும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாகத்தலையிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா அந்தக் கடிதத்தில்கூறியுள்ளார்.

கருணாநிதி கடும் கண்டனம்:

இதற்கிடையே தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதிகடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த 3ம் தேதிதான் 76 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திக் கொண்டுசென்றனர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மறுநாளே மேலும் 42 தமிழக மீனவர்களை அவர்கள்கடத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இவ்வாறு கடத்தப்படுவதை அறிந்து தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களோ அல்லது கடற்படையினரோ கடத்திச் செல்வதுதொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த நேரத்தில் மட்டும் உத்தரவாதம்அளிக்கப்படுகிறது. இலங்கை அரசுடன் புதிய புதிய ஒப்பந்தங்களும் இது தொடர்பாகஎடுக்கப்படும்.

ஆனால் அதற்குப் பின்னர் அது பற்றிய சிந்தனையே அவர்களுக்கு இல்லாமல் போய் விடுவதுதான்வேதனையாக உள்ளது.

இது போன்ற கடத்தல் சம்பவங்கள் இனியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+