இலங்கை சிறையில் இன்னும் 46 தமிழக மீனவர்கள்: ராமேஸ்வரத்தில் தொடர்ந்து பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஞ்சிய 46 தமிழக மீனவர்களும் இன்றுடன்விடுவிக்கப்படவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 118 மீனவர்களும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21மீனவர்களும் அடுத்தடுத்து இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கடத்தப்பட்டனர்.

0தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 93 மீனவர்கள்கடந்த 6ம் தேதி விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஞ்சிய 46 மீனவர்களும் ஐந்து நாட்களில்விடுவிக்கப்படுவார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.

அதன்படி இன்றுடன் கெடு முடிவடைந்து விட்டதாக எச்சரித்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள்,இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று புகார் கூறினர்.

இதனால் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கச்சத் தீவில் உள்ள அந்தோனியார் கோவில் திருவிழாவில் இன்று கட்டாயம் கலந்துகொள்வோம் என்று ராமேஸ்வரம் மீனவர்களும் அங்கு வாழும் கிறிஸ்வதவர்களும் கூறியுள்ளனர்.

இதனால் கச்சத் தீவு மற்றும் ராமேஸ்வரத்தில் இன்றும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தவறிப் போய் நுழைந்துவிடக் கூடாதுஎன்பதற்காக அப்பகுதிகளில் இந்தியக் கடலோரக் காவல் படை ரோந்துப் பணியைத்தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி 3ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுஅந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று இரவு விமானம்மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

இந்த மீனவர்கள் இலங்கையின் மன்னார், அனுராதபுரம் மற்றும் கொழும்பு சிறைகளில்அடைக்கப்பட்டிருந்தனர்.

திருவனந்தபுரம் வழியாக விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள் இன்று ராமேஸ்வரத்திற்குக்கொண்டுசெல்லப்படுகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+