வைகோ விவகாரம்: காங்கிரஸ் மூலம் பா.ஜ.கவுக்கு டென்சன் தரும் திமுக
சென்னை:
பொடா சட்டம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளின்கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிமுகவின் பக்கம் பா.ஜ.க. சாயத் தொடங்கியதிலிருந்தே தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. மத்தியில்மட்டும் இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தபோதிலும் தமிழகத்தில் அவை கடந்த ஆண்டேகூட்டணியைத் துண்டித்துக் கொண்டன.
இந்நிலையில்தான் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதை பா.ஜ.க. வலுவாகக் கண்டிக்கவில்லை. இந்த விஷயத்தில் துணைப் பிரதமர்அத்வானி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பதாக வைகோ கருதுகிறார்.
பொடா சட்டத்தில் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். இதை மதிமுக அமைச்சர்களிடமே அத்வானி கண்டித்ததாகத்தெரிகிறது.
இதனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி வரும் வைகோ திமுகவை தீவிரமாக ஆதரிக்கத்தொடங்கியுள்ளார்.
வைகோ கைதாகி எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரை விடுவிக்க எந்தவிதமானநடவடிக்கையும் எடுக்காத பா.ஜ.க. தலைமை தொடர்ந்து ஜெயலலிதாவுடன் உறவை வலுப்படுத்திவருவதால் மதிமுகவும், திமுகவும் கடும் எரிச்சலடைந்துள்ளன.
இதையடுத்து பொடா சட்டம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் திமுகஅழைப்பு விடுத்துள்ளது. வரும் 12ம் தேதி நடக்கும் இக் கூட்டத்துக்கு பா.ஜ.க. தவிர தமிழகத்தின்அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதன்முறையாக காங்கிரஸ் கட்சியை தான் நடத்தும் கூட்டத்துக்கு கருணாநிதிஅழைத்துள்ளார். ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடக்கும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளதைக் கண்டு பா.ஜ.க. எரிச்சல்அடைந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளரான எச். ராஜா கூறுகையில்,
திமுகவின் இந்தப் போக்கு தேசிய ஜனநாயகக் கூட்டயை பாதிக்கும். சமீபத்தில் சாத்தான்குளத்தில்நடந்த இடைத் தேர்தலின்போது கருணாநிதியின் படத்தைக் காட்டி காங்கிரஸ் கட்சி ஓட்டுவேட்டையாடியது. இதுவரை இந்த விஷயத்தை கருணாநிதியும் மறுக்கவே இல்லை.
மேலும் திமுக இளைஞரணித் தலைவரான ஸ்டாலினும் சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு எதிராகபொதுக் கூட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தந்தார்.
சாத்தான்குளத்தில் நாங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக எந்தவிதமான பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை.கூட்டணியின் ஒற்றுமை குலையும் வகையில் பா.ஜ.க. இதுவரை நடந்து கொள்ளவில்லை. ஆனால்திமுகவின் இந்தப் போக்கு நீடிப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை என்றார் ராஜா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications