ஜெயலலிதாவின் பல்லவிகள்: கருணாநிதி பதில் தாக்கு
சென்னை:
தன் ஆட்சியின் மூலம் தமிழகத்துக்கு திருமகள் வந்து விட்டாள் என்று பல்லவி பாடும் முதல்வர்ஜெயலலிதா, அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை பல்லவியையும் பாடிக் கொண்டிருப்பது ஏன் என்றுகருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சத்தியத்தையும் உண்மையையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பதால்தான் தமிழக மக்கள் எனக்குத்தொடர்ந்து வெற்றியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அப்படியானால் கடந்த 1996ம் ஆண்டு இந்த அம்மையார் உண்மையையும் சத்தியத்தையும்கடைப்பிடிக்காததால்தான் அதிமுக படுதோல்வி அடைந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
எங்கே உண்மை, தர்மம், நீதி இல்லையோ அங்கு இருக்கப் போவதில்லை என்று கூறி திருமகளாகியலட்சுமி தன்னிடம் வந்து சேர்ந்து விட்டாள் என்று ஜெயலலிதா பேசியுள்ளார்.
பிறகு ஏன் பொழுது விடிந்து, பொழுது போன பின்பும் நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியையேஅவர் பாடிக் கொண்டிருக்கிறார்?
மனு நீதிச் சோழன் வாழ்ந்த திருவாரூரில்தான் தங்கள் பிள்ளைகளை மட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு ஊரார் பிள்ளைகளைப் போராட்டத்திற்கு வா என்று அழைக்கிற "உத்தமமான" தந்தைகள்உள்ளனர் என்று என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் ஜெயலலிதா.
அந்தப் பிள்ளைகளில் ஒருவர்தான் மிசா கைதியாக ஓராண்டு வரை சென்னை சிறையில்அடைபட்டுக் கிடந்தார். மேலும் இந்த அம்மையார் ஆட்சியில்தான் கடந்த ஆண்டும் அந்தப் பிள்ளைமதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்தார். உத்தமமான உள்ளம் படைத்த ஊரார் அனைவருக்குமேஇது தெரியும்.
ஜனநாயகம் ஆரோக்கியமாகவும், உயிர்த் துடிப்போடும் இருக்கிறது என்பதற்கு தான் முதல்வராகஇருப்பதே சாட்சி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அந்த ஜனநாயகம் ஆரோக்கியமாக உள்ளதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அதன் உயிர்துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஜெயலலிதா தெளிவாகவும் சரியாகவும்தான்தெரிவித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications