சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: திமுக, காங். வெளிநடப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் துணை மேயர் "கராத்தே" தியாகராஜன் தொடக்கஉரையாற்றியதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் "கராத்தே" தொடக்க உரையாற்றினார். ஆனால் திமுக, காங்கிரஸ்உறுப்பினர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேயருக்கான அதிகாரங்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்கண்டித்த பிறகும் அதை மீறும் வகையில் "கராத்தே" தொடக்க உரையாற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக அவையிலிருந்துவெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் சென்னை மாநகராட்சி திமுக தலைவர் சி.பி.மலையன் பேசுகையில்,
மேயருக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கடுமையாகக்கண்டித்த போதிலும் அதை துணை மேயர் மீறியுள்ளார். எனவே அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தில் தொடக்க உரையாற்றுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனாலும்நீதிமன்ற உத்தரவையும் "கராத்தே" மீறியதால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கலைவாணன் சமீபத்தில் ஹைதராபாத்திற்குச் சென்றுவந்ததையும் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று கலைவாணனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்றார் மலையன்.
திமுகவும் காங்கிரஸும் வெளிநடப்பு செய்த பின்னர் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. அடுத்த நிதி ஆண்டில் ரூ.511.09 கோடி வரவும், ரூ.508.83 கோடி செலவும்ஏற்படும் என்று இந்த பட்ஜெட் தெரிவிக்கிறது.
மேலும் ரூ.180 கோடி செலவில் தனியார் கம்பெனி உதவியுடன் குப்பையிலிருந்து மின்சாரம்தயாரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளதாகவும் இந்த பட்ஜெட்டில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications