கிருஸ்துவர்கள் குறித்து சர்வே நடத்தும் குஜராத் அரசு
டெல்லி:
குஜராத்தில் உள்ள கிருஸ்தவ மக்கள் குறித்து விவரங்களைச் சேகரிக்குமாறு மாநில காவல்துறைக்கு அரசுஉத்தரவிட்டுள்ளது. இதற்கு கிருஸ்துவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் மத மோதல்களை பின்னணியாக வைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தார் பா.ஜ.கவைச் சேர்ந்த நரேந்திரமோடி. ஆட்சிக்கு வந்த சில மாதங்கள் அமைதியாக இருந்த அவர் இப்போது அம் மாநில கிருஸ்துவர்கள் குறித்துசர்வே எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கிருஸ்துவர்கள் ஓரளவு அதிகம் வசிக்கும் அகமதாபாத், சூரத், ஜாம்நகர், வனஸ்காந்தா, சபர்மதி ஆகியமாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களுக்கு மாநில அரசு ஒரு சுற்றறிக்கைஅனுப்பியுள்ளது. அதில்,
உங்கள் பகுதியில் எத்தனை கிருஸ்துவர்கள் வசிக்கிறார்கள்? அவர்களது பெயர், முகவரி என்ன? கடந்த ஆண்டுஎத்தனை பேர் வசித்தார்கள்? எத்தனை பேர் கிருஸ்துவர்களாக பிறந்தவர்கள்? எத்தனை பேர் கடந்த ஆண்டுக்குள்மதம் மாறியவர்கள் போன்ற விவரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த சர்வே மத்தியஅரசின் உத்தரவுப்படி நடத்தப்படுகிறது என்றார்.
இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் இப் பிரச்சனை வெடித்தது. எதற்காக குஜராத்தில் வசிக்கும் கிரஸ்துவர்கள்குறித்து சர்வே நடத்துகிறீர்கள் என்று அரசுக்கு எதிர்க் கட்சியினர் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் கேள்விஎழுப்பினர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெயபால் ரெட்டி பேசுகையில், கிருஸ்துவ மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்த பா.ஜ.க.முயல்கிறது என்றார்.
இதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
குஜராத்தில் சர்வே தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்தின் உளவுப் பிரிவு போலீசார்உதவியுடன் இந்த சர்வே நடக்கிறது. விசாரணை என்ற பெயரில் இரவு நேரத்தில் கிருஸ்துவர்களின் வீட்டுக்கதவைத் தட்டி போலீசார் கேள்விகள் கேட்டு வருவதாக அம் மாநில கிருஸ்துவ சமூகத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications