இந்தியர்கள் சித்திரவதை: மலேசிய அமைச்சர் வருத்தம்
டெல்லி:
மலேசியாவில் அந்நாட்டு போலீசாரால் இந்தியர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அந்நாட்டுஅமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள பிரீக்பீல்ட்ஸ் பகுதியில் வசித்து வரும் 270 இந்தியர்களின் வீடுகளிலும் அத்துமீறி நுழைந்தமலேசியப் போலீசார் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும், விசா பக்கங்களையும் கடுமையாகச்சேதப்படுத்தினர்.
மேலும் சுமார் 195 பேரைக் கைது செய்து போலீஸ் காவலிலும் வைத்தனர். இவர்களில் ஏராளமானவர்கள்சாப்ட்வேர் இன்ஜினியர்கள். போலீஸ் நிலையத்தில் இந்தியர்களை மண்டியிட வைத்தும், அடித்தும், உதைத்தும்போலீசார் மிகவும் கேவலமாக நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் டெல்லியில் உள்ள மலேசியத் தூதர் ஜூசிகியோவை நேரில் அழைத்து மத்திய அரசுகடும் கண்டனத்தைத் தெரிவித்தது. மேலும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பான "நாஸ்காம்"அமைப்பும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி வந்துள்ள மலேசிய சிறு தொழில் வளர்ச்சித் துறை அமைச்சரான முகமது நாஸ்ரி அப்துல்ஆசிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
மலோசியாவில் உரிய விசா மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் யாரும் தங்கியுள்ளார்களாஎன்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். ஆனால் அவ்வாறு நடந்த ஒரு சோதனையின்போதுஇந்தியர்களை எங்கள் நாட்டுப் போலீசார் தாக்கியுள்ள சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது.
இதில் மலேசிய அரசுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தமலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டொரு நாட்களில் விசாரணை முடிந்து விடும். குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் மலேசியப்போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியர்களை
சித்திரவதை செய்த மலேசிய போலீஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications