பேரழிவு குண்டு: அமெரிக்கா வெடித்து சோதனை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அணு குண்டுக்கு இணையான அதிக சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா வெடித்து சோதனையிட்டுள்ளது.

இதன் வெடிச் சத்தம் 30 கி.மீ. தூரத்திற்கு அப்பாலும் கேட்டது. மேசிவ் ஆர்டினன்ஸ் ஏரியல் பாம் (Massive Ordinance Aerial Bomb-MOAB) என்ற இந்த 21,000 பவுண்ட் எடை கொண்ட குண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள எக்லின் விமான தளத்தில்சோதனையிட்டுப் பார்க்கப்பட்டது.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இந்த சோதனையை நடத்தியது. ஈராக் வீரர்களை மிரட்டவே இந்தச் சோதனைநடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. அணு குண்டுக்கு இணையான குண்டாக இது கருதப்படுகிது. மாபெரும் நாசம் விளைவிக்கும் இந்தகுண்டை ஈராக்கில் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விமானத்தில் இருந்து வீசப்படும் இந்த குண்டு தரைக்கு கொஞ்சம் மேலே வெடிக்கும். அப்போது மிகப் பெரிய அதிர்வு அலை உண்டாகும்.இந்த அதிர்வு அலை பல கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள கட்டடங்களை தரைமட்டமாக்கும். இதில் தரைக்கு அடியில் உள்ள கட்டடங்களும்அப்பளமாகும். அப் பகுதியில் உள்ளவர்களை சிதற வைத்துக் கொல்லும். அப்போது அணு குண்டைப் போலவே பல கி.மீ. உயரத்துக்குவானில் காளான் போன்ற மிகப் பெரிய புகை மூட்டம் பரவும்.

கிட்டத்தட்ட அணு குண்டு வெடிக்கும்போது ஏற்படும் அதே விளைவுகள் இந்த குண்டிலும் உருவாகிறது. கடந்த ஆண்டு தான் இந்த குண்டின்ஆராய்ச்சியை அமெரிக்கா தொடங்கியது. இப்போது குண்டு தயாராகிவிட்ட நிலையில் ஈராக்கில் இதைப் பயன்படுத்தப் போவதாகபென்டகன் கூறியுள்ளது.

ஈராக் அதிபர் சதாம் ஹூசேனின் தரையடி பதுங்கு குழிகளையும், நிலத்தடி பாதுகாப்பு அரண்களையும் சிதறடிக்க இந்த குண்டைஅமெரிக்கா பயன்படுத்தும் என்று தெரிகிறது.

அமெரிக்க உளவு விமானத்தை விரட்டிய ஈராக்:

இதற்கிடையே ஐ.நா. அனுமதியை மீறி ஈராக் மீது பறந்த இரு அமெரிக்க விமானங்களில் ஒன்றை ஈராக்கின் போர் விமானம் விரட்டியது.இதையடுத்து அமெரிக்க விமானம் உடனடியாக திரும்பிச் சென்றது.

ஈராக் மீது யு-2 ரக உளவு விமானங்கள் மூலம் சோதனை நடத்தி வருகிறது ஐ.நாட்டு சபை. இந்த விமானங்கள் அமெரிக்காவுக்குசொந்தமானவை. குறிப்பிட்ட நேரத்தில் ஒரே ஒரு விமானம் மட்டுமே பறக்க ஈராக்கிடம் ஐ.நா. அனுமதி வாங்கியுள்ளது.

ஆனால், ஒரே நேரத்தில் இரு விமானங்களை அமெரிக்கா அனுப்பியது. இதையடுத்து ஒரு உளவு விமானத்தை ஈராக் விமானப் படையின்மிக்-23 விமானம் விரட்ட ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து அந்த உளவு விமானம் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் செயல் தவறானது என ஐ.நா. கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+