அயோத்தி: அகழ்வாராய்ச்சி பணிக்கு தடை கோரி வழக்கு
அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறியும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்குத்தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காகநிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 5ம் தேதி மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் நிலத்தைத் தோண்டும்பணியைத் தொடங்கினர். இன்று மூன்றாவது நாளாக நிலத்தைத் தோண்டும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்குத் தடை கோரி நவித் யார்கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தப் பணியும் நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவேஉத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மட்டும் எப்படிஉத்தரவிடலாம் என்று தன் மனுவில் கேள்வி எழுப்பியுள்ள நவித் யார்கான், எனவே அந்தப்பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது செங்கற்கள் மற்றும்கிழிஞ்சல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று மட்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மொகரம்பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் அசம்பாவிதம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதுஎன்பதற்காகவே தோண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications