அமைதிப் பேச்சை புறக்கணிக்க புலிகள் திட்டம்?
கொழும்பு:
11 புலிகளுடன் வந்த படகை இலங்கைக் கடற்படை தாக்கி கடலில் மூழ்கடித்ததால் அமைதிப் பேச்சுவார்த்தைகளில்கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்யப் போவதாக புலிகள் கூறியுள்ளனர்.
சமீப காலத்தில் இது புலிகள் படகு மீது நடந்த இரண்டாவது தாக்குதலாகும். விமான எதிர்ப்பு பீரங்கிகளைக் கடத்திவந்ததாகக் கூறி ஒரு படகை கடற்படை சுற்றி வளைத்தது. இதையடுத்து அந்தப் படகுக்குத் தீ வைத்து அதை கடலில்புலிகளே மூழ்கடித்ததோடு 2 புலிகளும் பலியாயினர்.
இந் நிலையில் சமீபத்தில் சர்வதேசக் கடல் எல்லையில் வந்து கொண்டிருந்த புலிகளின் படகு சுற்றி வளைக்கப்பட்டுஇலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதில் அந்தப் படகு சிதறி கடலில் மூழ்கியது. அதில் இருந்த 11புலிகளும் இறந்தனர்.
தமிழர் பகுதிக்கு உணவு கொண்டு வந்த படகை கடற்படை தாக்கி அழித்துள்ளதாக புலிகள் கூறியுள்ளனர். அதில்ஆயுதங்கள் ஏதும் இருந்ததாக இலங்கை அரசும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலையும் மீறி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்போம் என புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது புலிகள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிக்கலாமா என்று யோசித்து வருவதாக புலிகள் அறிவித்துள்ளனர். இதனால்ஜப்பானில் வரும் 18ம் தேதி தொடங்கும் 6வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்ற சந்தேகம்ஏற்பட்டுள்ளது.
எப்படியாவது புலிகளை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கச் செய்ய நார்வே முயன்று வருகிறது. புலிகள் படகுமூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications