நெல்லை விழாவில் அரசியலை தவிர்த்த ஜெயலலிதா
திருநெல்வேலி:
புத்திசாலிப் பெண்கள் எந்தத் துறையிலும் ஜொலிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
திருநெல்வேலியில் ரூ.267.33 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கிவைத்த ஜெயலலிதா, ரூ.165 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர்13,518 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர்பேசுகையில்,
எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் திறமை பெண்களுக்கு உண்டு. ஆனால் சரியான சந்தர்ப்பம்வரவேண்டும். அது மட்டும் கிடைத்து விட்டால் எதையும் சாதிக்கும் வல்லமை பெண்களுக்குஉண்டு.
ஆண்களையும் "ஓவர் டேக்" செய்து விடும் திறமை பெண்களுக்கு உண்டு. உங்களுடைய அன்புச்சகோதரியான நானே அதற்கு சரியான உதாரணமாக விளங்குகிறேன்.
கடந்த 1992ம் ஆண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்தேன். தற்போது மாநிலம்முழுவதிலும் 1,18,413 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 20.26 லட்சம்பெண்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் ரூ.267.22 கோடி அளவுக்கு சேமிப்புஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
அரசுப் பணத்தில் நடக்கும் மாவட்ட விழாக்களில் அரசியல் தலைவர்களை ஜெயலலிதா விமர்சித்துவந்தார். இதை எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதனால் அரசு விழாக்களுக்கே தடைவிதிக்கக் கோரி வழக்குப் போடப் போவதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கேவைன்எச்சரித்திருந்தார்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு விழாவில் ஜெயலலிதா அரசியலே பேசவில்லை. மாறாக குட்டிக்கதைகள் கூறியும், பெண்களைக் கவரும் விதமாகவும் பேசி அசத்தினார்.
விழாவுக்கு வழக்கம்போல் சபாநாயகர் காளிமுத்துவே தலைமை தாங்கினார். அமைச்சர்கள்வளர்மதி, கருப்பசாமி, நைனார் நாகேந்திரன், திருநெல்வேலி மேயர் ஜெயராணி, மக்களவைஅதிமுக எம்.பிக்களின் தலைவர் பி.எச். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications