70 வழக்குகள்: கலங்கடித்த கொள்ளை கும்பல் சிக்கியது
சென்னை:
சென்னையில் 70 வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை சிறப்புப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சமீப காலத்தில் நடந்த வீடு புகுந்து திருடுதல், வழிப்பறிக் கொள்ளைகள், வாகனத்திருட்டு என சகலவிதமான திருட்டுகளில் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு உள்ளது.
நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததும் போலீஸ் ஆணையர் விஜயக்குமார் உத்தரவின் பேரில்பல்வேறு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில்தற்போது 7 பேர் சிக்கியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த லாரன்ஸ், ராமு (சிவகங்கை), சீனி (கொரட்டூர்), செல்வராஜ் (சோழாவரம்),குட்டி (வில்லிவாக்கம்), அலெக்ஸ் (திரு. வி.க. நகர்) பாபுராவ் ஆகியோர்தான் பிடிபட்டுள்ளனர்.
வேளச்சேரி, அண்ணா நகர், வில்லிவாக்கம், கே.கே. நகர், கிண்டி, கோயம்பேடு, கோடம்பாக்கம்,அடையார், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், ஆதம்பாக்கம்,பழவந்தாங்கல், மடிப்பாக்கம், குரோம்பேட்டை என சென்னையின் அனைத்து முக்கியமானபகுதிகளிலும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது.
இவர்களில் ராமு என்பவன் பூட்டை உடைப்பதில் மகா கில்லாடி என்று போலீஸார் தெரிவித்தனர்.எந்த வகையான பூட்டையும் சில விநாடிகளில் உடைத்து விடுவானாம் ராமு. இவன் ஏற்கனவே 7முறை கைதாகி சிறைவாசம் அனுபவித்தவன்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 300 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி, எட்டு மோட்டார்சைக்கிள்கள், டி.வி., டேப் ரெக்கார்டர், வி.சி.ஆர். உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
-->
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications