பாக். மீதான தடைகள்: அமெரிக்கா நீக்கம்
வாஷிங்டன்:
ஈராக விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் ஆதரவைப்பெறுவதற்காக அந் நாட்டின் மீதான தடைகளை அமெரிக்கா திடீரென நீக்கியுள்ளது.
ஈராக்கைத் தாக்க பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள பிரிட்டன், பல்கேரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மட்டுமேஅமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்க முன் வந்துள்ளன.
பாகிஸ்தான், சிலி, மெக்சிக்கோ போன்ற நாடுகள் ஆதரவு தரவில்லை. இவை நடுநிலை வகிக்கப் போவதாககூறியுள்ளன. பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொடர்ந்துபேசி வருகிறார்.
போருக்கு ஆதரவு தர முஷாரப் விரும்பினாலும் பிரதமரும் நாடாளுமன்றமும் அதை ஏற்க மறுத்துவிட்டன. மதஅடிப்படைவாதிகளின் கூட்டணி தான் பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்துவாக்களிக்குமாறு முஷாரபை நாடாளுமன்றம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், தனது பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் தன் ராணுவத்தை விட அமெரிக்காவையே அதிகம்நம்பியிருக்கும் முஷாரப், எதிர்த்து வாக்களிக்க தயாராக இல்லை. இதனால் நடு நிலை வகிக்கப் போவதாககூறியுள்ளார்.
இந் நிலையில் பாகிஸ்தானை வாக்கை எப்படியாவது பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. 1999ம்ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபை ராணுவம் மூலம் நீக்கிவிட்டு ஆட்சிக்கு வந்தார்முஷாரப்.
இதனால் அந் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இப்போது திடீரென இத் தடைகள்நீக்கப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும்.
அமெரிக்க- பிரிட்டன் கூட்டம்:
இதற்கிடையே ஈராக் விவாகாரம் குறித்து விவாதிக்க அமெரிக்க, பிரிட்டன், ஸ்பெயின் நாட்டுத் தலைவர்களின்சிறப்புக் கூட்டம் நடக்கவுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications