டெல்லியில் 4 தாவூத் கூட்டாளிகள் கைது
டெல்லி:
சர்வதேசக் கடத்தல் மன்னர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் ஆகியோரின் 4கூட்டாளிகள் டெல்லியில் இன்று காலை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் ஒருவரைக் கொலை செய்ய தாரிக் என்பவன்தலைமையில் நான்கு பேர் வந்து கொண்டிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அதன்படி இன்றுகாலை டெல்லி வந்து சேர்ந்த நான்கு பேரையும் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் ஒரு பைக்கும் பறிமுதல்செய்யப்பட்டன.
தாவூத்தின் மிக நெருங்கிய கூட்டாளிகளான இந்த நான்கு பேரும் உத்தரப் பிரதேச மாநிலம்சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இன்று பிற்பகல் அவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர்போலீஸ் காவலிலும் மற்றவர்கள் நீதிமன்றக் காவலிலும் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே போர்ச்சுக்கல்லில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமற்றொரு கடத்தல் மன்னன் அபு சலீமின் சிறைக் காவல் நாளையுடன் முடிவடைகிறது. கடந்த1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அவன் இன்னும்இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications