லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை:
வட்டிக் கடைக்காரரை மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தைப் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சென்னைஅண்ணா சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் உள்பட 4 போலீசாரும் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பக்தவச்சலம் என்ற வட்டிக் கடைக்காரரை மிரட்டி அவரிடமிருந்துரூ.2லட்சம் பணத்தை கர்ணனும், போலீஸ் ஏட்டுக்களான லட்சுமிபதி, ஜமாலுதீன், கனகராஜ்ஆகியோரும் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் கூடுதலாக ரூ.6 லட்சம் பணம் வேண்டும் என்றும் அவரிடம் போலீசார் கேட்டனர்.
இதையடுத்து பக்தவச்சலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்குபோலீசாரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்ணன் உள்ளிட்ட நான்கு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களுடைய சொத்துக்கள் குறித்தும், லஞ்சம் மூலமாக சொத்துக்கள் ஏதும்சேர்த்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications