சென்னையில் தலைவிரித்து ஆடும் குடிநீர் பிரச்சினை
சென்னை:
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் குடிநீர் கோரி பொது மக்கள் மெட்ரோ வாட்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோடை காலம் வந்து விட்டால் சென்னை மக்கள் குடமும் கையுமாகத் தண்ணீருக்காக அலையஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆண்டு அது இப்போது தொடங்கியுள்ளது. நகரின் சில பகுதிகளில்கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாகவே குடிநீர் விநியோகம் சரிவர இல்லை.இதனால் பொறுமையிழந்து போன பொதுமக்கள் இன்று மெட்ரோ வாட்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாகத் தங்களது பகுதிகளுக்கு தண்ணீர் தராவிட்டால் போராட்டம் தொடரும் என்று அவர்கள்தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களைசமாதானப்படுத்தினர்.
விரைவில் அப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று கூறிய பின்னரே மக்கள்போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதற்கிடையே சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்துவருகிறது. இதனால் விரைவில் சென்னை நகரில் பெரும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படலாம் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பூண்டி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகளில்தான் ஓரளவுதண்ணீர் உள்ளது. அங்கும் நீர் வற்றத் தொடங்கி விட்டால் இந்தக் கோடை காலத்தில் கடும் குடிநீர்ப்பற்றாக்குறையை சென்னை மாநகர் சந்திக்கும் அபாயம் உள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications