இந்தியா அதிரடி: மலேசியாவில் அதிர்ச்சி அலை
கோலாலம்பூர்:
மலேசியப் போலீசாரால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்பட 270 இந்தியர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மலேசிய அரசை வலியுறுத்தியுள்ளன.
மலேசியாவில் கடந்த வாரம் 270 இந்தியர்கள் அந்நாட்டுப் போலீசாரால் கொடுமையான சித்திரவதைக்கு ஆளானசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட மலேசிய அரசு வெறும் வருத்தம் தெரிவித்ததோடுஅமைதியாகி விட்டது. விசாரணை நடப்பதாகக் கூறி வருகிறது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா,மலேசியாவுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்துள்ளது.
மலேசிய அமைச்சரின் வருகையை ரத்து செய்தது, மலேசிய தூதரை அழைத்து கண்டித்தது, இந்தியாவில் படிக்கும்மலேசிய மாணவர்களின் விசாரணை. மலேசியா நடக்கும் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டிகளைப் புறக்கணித்துஎன இந்தியா அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகள் மலேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கும் மலேசியா மசியவில்லை என்றால் மேலும் தூதரை திருப்பி அனுப்புவது உள்ளிட்டசில தீவிரநடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்தியா யோசித்து வருகிறது. இது அந் நாட்டு அரசைகவலைக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக எதிர்க் கட்சிகள் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும்என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவுடன் நல்லுறவுகளைத் தொடரும் பொருட்டு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிவிவாதித்து தவறு செய்த போலீசார் மீது மலேசிய அரசு கூட்ட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க் கட்சிகள்கோரிக்கை விடுத்துள்ளன.
மலேசிய-இந்திய உறவு மேலும் மோசமாகப் போய் விடுவதற்கு முன் இதற்குத் தக்க முடிவு ஒன்றை எடுக்கவேண்டியது அவசியம் என்று மலேசிய குடியரசு கட்சித் தலைவரான லிம் கிட் சியாங் கூறினார்.
மலேசியத் தமிழரும் தொழில் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தலைமையில் நாளையே இந்த அவசரக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications