லஞ்ச வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரி வீட்டுக்கு "சீல்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வட்டிக் கடைக்காரரை மிரட்டி லஞ்சம் வாங்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்வீட்டில் அதிரடியாகச் சோதனையிட்ட போலீசார் பின்னர் அந்த வீட்டை "சீல்" வைத்துப் பூட்டினர்.

கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த வட்டிக் கடைக்காரர் பக்தவச்சலம் என்பவரை மிரட்டி அவரிடம் ரூ.2 லட்சம்வரை லஞ்சம் பெற்றதாக சென்னை-அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன், தலைமைக் காவலர்கள்கனகராஜ், ஜமாலுதீன் மற்றும் லட்சுமிபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நான்கு பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று இவர்கள் நான்கு பேரும்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அவர்களுடைய சொத்து விவரங்கள் குறித்த தகவல்களைத் திரட்டுமாறும்போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று சென்னை-முகப்பேரில் இருந்த கர்ணனின் வீட்டை போலீசார் அதிரடியாகசோதனையிட்டனர். அப்போது சுமார் ரூ.2.2 லட்சம் பணம் அவருடைய வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு முன் அவர் தங்கியிருந்த வேப்பேரி வீட்டையும் அவர் இன்னும் காலி செய்யாமல்தான் வைத்திருந்தார்.அந்த வீட்டிலும் நேற்று போலீசார் சோதனையிட்டனர்.

கர்ணன் மனைவியின் முன்னிலையில்தான் இரண்டு வீடுகளும் சோதனையிடப்பட்டன. சோதனைக்குப் பின்னர்முகப்பேர் வீட்டை போலீசார் "சீல்" வைத்துப் பூட்டினர். அவருடைய மனைவியும் இரண்டு குழந்தைகளும்உறவினர் வீட்டில்தான் தங்கியுள்ளனர்.

கர்ணன் மனைவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சிறந்த போலீஸ் அதிகாரிஎன்று பெயர் வாங்கியவர்தான் கர்ணன். மிலிட்டரி குமார் என்ற ரவுடியை சுட்டுக் கொன்றுள்ளார்.

ஆனால் கொள்ளையர்கள், ரவுடிகள் ஆகியோரின் ரகசியத் தகவல்களைச் சேகரிப்பதற்காக 40 பழையகுற்றவாளிகளுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இந்தப் பழக்கத்தின் எதிரொலியாகத்தான் அவர்தற்போது லஞ்சம் வாங்கும் அளவுக்குப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

கர்ணனிடம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த ஒரு போலீஸ் அதிகாரிதான் அவரைத் தற்போது கைது செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+