அமெரிக்காவை எதிர்க்க பிரான்ஸ் திட்டம்
ஐ.நா. சபை:
ஐ.நாடுகள் சபையின் அனுமதி இல்லாமல் ஒருதலைப்பட்சமாக ஈராக்குக்கு கெடு விதித்து, தாக்குதல் நடத்தத் தயாராகிவரும்அமெரிக்காவை கடுமையாக எதிர்க்க பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
ஈராக் அதிபர் சதாம் ஹூசேனுக்கு அமெரிக்கா விதித்துள்ள கெடு இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்குமுடிவடைகிறது. கெடு முடிவடைவதற்கு 10 மணி நேரத்துக்கு முன்னதாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம்இன்று இரவு கூடுகிறது. இதில் அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பும்.
குறிப்பாக பிரான்சும் ஜெர்மனியும் அமெரிக்காவுக்கு பல கேள்விகளை எழுப்ப உள்ளன. இந்த நாடுகளின் நேரடித் தாக்குதலில் இருந்துதப்பும் வகையில் இன்றைய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் பங்கேற்கமாட்டார் என்று தெரியவந்துள்ளது.
இக் கூட்டத்தில் ஐ.நா. தலைமை ஆயுதக் கண்காணிப்பாளர் தனது அடுத்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உள்ளார்.
போர் நிச்சயமாகிவிட்ட நிலையில் நிலையில் ஈராக் நாடாளுமன்றமும் இன்று அவசரமாகக் கூடுகிறது. நேற்று தனதுபுரட்சிகர கமாண்ட் கவுன்சிலையும் தனது கட்சியான பாத் பார்ட்டியின் மூத்த தலைவர்களின் சதாம் ஹூசேன் கூட்டிநெடு நேரம் ஆலோசனை நடத்தினார்.
புஷ்- புடின் பேச்சு:
இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ஈராக்கைத் தாக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு புடின் எதிர்ப்புத் தெரிவித்தார். அதே நேரத்தில் இதனால் இரு நாட்டுநல்லுறவுக்கு இதனால் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என இரு தலைவர்களும் கருத்துத் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பிரான்ஸ், ஜெர்மனி அளவுக்கு அமெரிக்காவை ரஷ்யா எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு புடினுக்கும்புஷ்சுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பே காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால், புடினின் இந்த நிலைக்கு ரஷ்ய ராணுவம் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications