இலவச மின்சாரம் ரத்து: 3 கட்ட போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
சென்னை:
இலவச மின்சாரத்தை ரத்து செய்தததைக் கண்டித்து 3 கட்டமாக போராட்டம் நடத்த அனைத்து விவசாயிகள்சங்கங்களும் முடிவு செய்துள்ளன. இலவச மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் வரை மின் கட்டணத்தைசெலுத்துவதில்லை என்றும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இலவச மின்சாரம் ரத்து தொடர்பாக விவாதிக்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிங்கள் சங்கங்களின்கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துகூட்டமைப்பின் தலைவரும் திமுக விவசாய அணி செயலாளருமான கே.பி. ராமலிங்கம் கூறுகையில்,
பஞ்சாயத்து அளவில் ஏப்ரல் 3ம் தேதி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். அடுத்தபடியாக, தாலுகாதலைநகரங்களில் மே 2ம் தேதி பேரணிகள் நடத்தப்படும். இறுதியாக செப்டம்பர் 1ம் தேதி முதல் மின் வாரியஅலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவார்கள்.
மின் வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், கிராமங்களுக்குள் நுழைந்து, மின் கட்டணத்தை வசூலிக்க விவசாயிகள்அனுமதிக்க மாட்டார்கள். மின் கட்டணம் செலுத்தாத விவசாயிகளின் மின் இணைப்பைத் துண்டிக்க வரும்அதிகாரிகளையும் நாங்கள் கிராமங்களுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றார் ராமலிங்கம்.
அதிமுகவைத் தவிர பிற கட்சிகளின் விவசாய அணிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. மொத்தம் 56விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றதாக ராமலிங்கம் தெரிவித்தார்.
21ல் விடுதலை சிறுத்தைகள் போராட்டம்:
இதற்கிடையே மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் வரும் 21ம் தேதி போராட்டம் நடத்த விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்துள்ளனர்.
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது, விவசாயிகளுக்கு மீண்டும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தபோராட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications