புஷ் ஒரு முட்டாள்: ஈராக்
பாக்தாத்:
போருக்கு எதிராக குரல்கள் உலகெங்கும் ஓங்கிக் கொண்டிருந்தாலும் குவைத் எல்லையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஈராக் நோக்கிநகர ஆரம்பித்துவிட்டன.
நேற்றிரவு அவை ஈராக்கை நோக்கி பல கி.மீ. தூரம் முன்னேறின. பாலைவனத்தில் இரவு நேர போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டன.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரும் உடனே பதவி விலக வேண்டும் என ஈராக் பதில்கெடு விதித்துள்ளது.
அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நஜி சப்ரி நிருபர்களிடம் பேசுகையில், ஜார்ஜ் புஷ்ஷை முட்டாள் மனிதர் என்று குறிப்பிட்டார்.அவர் கூறியதாவது: 48 மணி நேர கெடுவை அதிபர் சதாம் நிராகரித்துவிட்டார். புஷ் மற்றும் டோனி பிளேர் ஆகிய இருவரும் உடனேபதவி விலக ஈராக் உத்தரவிடுகிறது.
ஸ்பெயின் குடியரசா அல்லது அரசாட்சி நடக்கும் நாடா என்பது கூடத் தெரியாத முட்டாள் தான் ஜார்ஜ் புஷ். ஈராக்கின் எண்ணெய்வளத்தைக் குறி வைத்து நடக்கும் இந்தப் போரில் ஜார்ஜ் புஷ் தான் முதல் குற்றவாளி. போர்க் குற்றவாளியான அவர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்றார்.
அணி மாறும் ஈராக் தளபதிகள்?
இதற்கிடையே ஈராக்கின் மிக முக்கியப் படையான ரிபப்ளிகன் கார்ட்டின் முக்கிய தளபதிகள் அமெரிக்க உளவுப் பிரிவினரைத் தொடர்புகொண்டு வருவதாகவும், அமெரிக்காவுக்கு ஆதரவாக அணிமாற ஆயத்தமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்தப் படையிடம் தான் சதாம் ஹூசேனைக் காக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படையைத் தான் அமெரிக்கா குறிவைத்துத் தாக்க உள்ளது. இந் நிலையில் அமெரிக்கத் தாக்குதலை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள இப் படையின் மூத்ததளபதிகள் அணி மாற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. கூறியுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications