தமிழகத்தில் 2010க்குள் தனி நபர் வருமானம் இரட்டிப்பாகும்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் 2010ம் ஆண்டுக்குள் மக்களின் தனி நபர் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவதற்குத் தேவையானதிட்டங்களைத் தமிழக அரசு வகுத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்தியத் தொழில் சம்மேளனம் நடத்திய அடிப்படை வசதி வளர்ச்சி மாநாட்டில் ஜெயலலிதா பேசுகையில்,

10ம் ஐந்தாண்டுத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.40,000 கோடி கிடைக்கும். இந்தத் தொகை கிடைத்த பின்னர்தமிழகத்தின் நிதி நிலைமை சீரடையும்.

அதன் பின்னர் தமிழகப் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி காண்பதற்குத் தேவையான முக்கியத் திட்டங்களைவகுத்துள்ளோம்.

வரும் 2010ம் ஆண்டுக்குள் தமிழக மக்களின் தனி நபர் வருமானம் இரண்டு மடங்கு ஆவதற்கானதிட்டங்களையும் தீட்டியுள்ளோம்.

10ம் ஐந்தாண்டுத் திட்டத்தின்போது துறைமுகங்களின் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தப்படும். எண்ணூர்,தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.

சாப்ட்வேர் துறையில் தெற்காசியாவிலேயே சிறந்து விளங்கும் சென்னையில் மத்ய கைலாஷிலிருந்து சிறுசேரிவரையிலான பகுதியில் பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ள "ஐ.டி. காரிடார்" நிறுவப்பட்டு, அதுமேம்படுத்தப்படும். இந்த ஆண்டுக்குள் அதைச் செயல்படுத்தி சர்வதேசத் தரத்திற்கு இணையானது அது என்பதைநிரூபிப்போம்.

சென்னை அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய ஏற்றுமதிப்பூங்காக்கள் நிறுவப்படும். அதேபோல் ஊட்டியில் மலர் வளர்ச்சிப் பூங்கா, தர்மபுரி மாவட்டத்தில் தோட்ட வளர்ச்சிபூங்கா, நாகர்கோவில் அருகே ரப்பர் பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மேலும் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.2,000 கோடி முதலீட்டில் பல வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம்செய்யப்பட உள்ளன. தமிழக விவசாயிகளுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி விவசாயம்செய்யவும் கற்றுத் தரப்படும் என்றார் ஜெயலலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+