கண்ணப்பன் நடத்தும் எழுச்சி மாநாட்டில் லல்லு, ராப்ரி பங்கேற்பு
சென்னை:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்ச்சிக்காக வரும் மேமாதம் சென்னையில் எழுச்சி மாநாடு நடத்தப் போவதாக மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன்கூறியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சரான கண்ணப்பன் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. இவை குறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே மாதம் சென்னையில் மிகப் பிரமாண்டமான அளவில் எழுச்சி மாநாடுநடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
பீகார் முதல்வர் ராப்ரிதேவி, அவரது கணவரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ்ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, மின் கட்டணவு உயர்வு ஆகியற்றைக் கண்டித்து வரும் ஏப்ரல் 7ம் தேதிசென்னையில் போராட்ட நடத்துவோம் என்றார் கண்ணப்பன்.
-->












Click it and Unblock the Notifications