பொடாவில் கைதான 10ம் வகுப்பு மாணவன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
10ம் வகுப்பு மாணவன் பிரபாகரனை பொடா சட்டத்தில் கைது செய்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவரை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த குருசாமிஎன்பவரின் மகனான 10ம் வகுப்பு படிக்கும் பிரபாகரன் என்பவரை கடந்த சில மாதங்களுக்க முன்போலீஸார் கைது செய்தனர். இதை எதிர்த்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து ஜாமீனில்விடுதலையானார் பிரபாகரன்.
ஆனால் பிரபாகரனுக்கு எதிராகப் பின்னர் பொடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து அவரைக் கைது செய்ய பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிரபாகரன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தன்னை மீண்டும் கைது செய்தது தவறு என்று சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பிரபாகரன்.
அம்மனுவை விசாரித்த நீதிபதி சம்பத், 15 வயது மாணவனான பிரபாகரனைப் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்தது தவறு என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும்உத்தரவிட்டார். பொடா நீதிமன்ற நீதிபதி தன் வரம்பை மீறி நடந்து கொண்டுள்ளதாகவும் நீதிபதிசம்பத் கண்டித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து பிரபாகரனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதிராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பிரபாகரன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனாலும் இவ்வழக்கு தொடர்பாக மற்ற கைதிகள் பொடா நீதிமன்றத்தில் ஆஜராகும்போதுபிரபாகரனும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
முன்னதாக இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து பெண்கள் உள்பட 28 பேரின் சிறைக் காவலைஏப்ரல் 16ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications