போரைத் தொடங்கியது அமெரிக்கா: முதல் தாக்குதலே சதாம் மீது தான்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

ஈராக் மீதான தாக்குதலை அமெரிக்கா இன்று அதிகாலை தொடங்கியது. இதற்குப் பதிலடியாக குவைத் மீது ஈராக் ஏவுகணைத்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

US missile exploding in Iraqஇதனால் அமெரிக்கத் தரைப்படை இன்று இரவு அல்லது நாளைக்குள் ஈராக்குக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 6.30 மணிக்கு சதாம் ஹூசேனைக் குறி வைத்து தனது முதல் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. தெற்கு ஈராக்கின் மீதுமுதல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. டாம்ஹாக் ரக ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள்நடத்தின.

பாக்தாத் நகரில் தெற்கே சதாம் ஹூசேன் உள்ளிட்ட மூத்த ஈராக்கிய தலைவர்கள் இருப்பதைக உளவு விமானங்கள் மூலம் தெரிந்துகொண்ட அமெரிக்கா இத் தாக்குதலை நடத்தியது. ஆனால், இத் தாக்குதால் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அரபிக் கடலில் உளள போர்க் கப்பல்களில் அடுத்தடுத்து 40 ஏவுகணைகள் பாக்தாத் நகரைத் தாக்கின.இதையடுத்து எப்-117 ரக குண்டு வீச்சு விமானங்களும் ஈராக்கைத் தாக்க ஆரம்பித்தன.

தொடர்ந்து பலத்த தாக்குதல் நடந்து வருகிறது. அமெரிக்க விமானங்களை ஈராக்கிய ராணுவத்தினர் விமான எதிர்ப்பு பீரங்கிகளால் தாக்கிவருகின்றன.

ஈராக்கில் ஊடுருவினால்...சதாம் எச்சரிக்கை

ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான வெட்கக்கேடான தாக்குதல் என அதிபர் சதாம் ஹூசேன் வர்ணித்துள்ளார்.அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுமாறு தனது வீரர்களுக்கும் மக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

F117 Flightஅமெரிக்க விமான- ஏவுகணைத் தாக்குதல் தொடங்கி 3 மணி நேரம் கழித்து தனது மகன் நடத்தி வரும் யூத் டிவியில் சதாம் ஹூசேன்பேசினார். ராணுவ உடையில் இருந்தார் அவர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பேச்சு ஏதோ ஒரு இடத்தில் பதிவு செய்யப்பட்டுபின்னர் ஈராக் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

தொலைக் காட்சியில் சதாம் பேசியதாவது: ஈராக்கை அநியாயமான முறையில் எதிரிகள் தாக்கி வருகின்றனர். உங்கள் நாட்டை பாதுகாக்கராணுவத்தினருடன் சேர்ந்து நீங்களும் (பொது மக்களும்) போராடுங்கள். இறுதியில் வெற்றி நமக்க்குத்தான். இறைவன் நம் பக்கமேஇருக்கிறான்.

ஈராக் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான இந்தத் தாக்குதலை முறியடிப்போம். இங்கு ஊடுருவ முயலும் அமெரிக்கர்களை துரத்திஅடிப்போம். இது ஒரு புனிதப் போர். கோழைத்தான இந்தத் தாக்குதலை நாம் வென்று காட்டுவோம்.

இஸ்லாமுக்கு எதிரான யூதர்களின் போர் தான் இது. இதில் அவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. உங்கள் வாள்களைக்கூர்மையாக்குங்கள். எதிரியை வெட்டிச் சாய்திடுங்கள். ஈராக்கில் நுழையும் அமெரிக்கப் படைகளுக்கு அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காதஎரிமலை காத்திருக்கிறது.

இவ்வாறு சதாம் ஹூசேன் கூறினார்.

Tomahawk Missileகுவிந்திருக்கும் அமெரிக்கப் படைகள்:

அமெரிக்க- பிரிட்டன் படைகளின் ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் குவைத் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.அவை எந்த நேரமும் ஈராக்குக்குள் நுழையலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஈராக்- குவைத் எல்லையில் அமெரிக்கப் படைகளை நோக்கி ஈராக் படைகள் ஆர்ட்டிலரி துப்பாக்கிகளால் தாக்கஆரம்பித்துள்ளன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தீவிர துப்பாக்கிச் சண்டையும் தொடங்கியுள்ளது.

தப்புவது எப்படி?

இதற்கிடையே ஈராக் படைகளின் மீது அமெரிக்க போர் விமானங்கள் இன்று லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசின.

அதில், அமெரிக்கப் படைகளைத் தாக்க வேண்டாம். உள்ளே நுழையும் அமெரிக்கப் படைகளைத் தாக்காமல் இருந்தால் உங்கள் உயிருக்குஎந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வோம். உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம்.

ஈராக்கின் டாங்கிகள், கவச வாகனங்கள், ராணுவ வாகனங்களை எங்கள் விமானங்கள் தாக்கும். எனவே, அவற்றை விட்டு 1 கி.மீ. தூரம்தள்ளியே நில்லுங்கள். சரணடைய விரும்பினால் வெள்ளைக் கொடியை காட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+