கொளத்தூர் மணிக்கு 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன்
பெங்களூர்:
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் 2 வழக்குகளில்நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த வழக்கு மற்றும் பாலாறு குண்டு வெடிப்பு வழக்கு ஆகியஇரண்டு வழக்குகளில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றையும் சேர்த்து கர்நாடக அரசு மணி மீது மொத்தம் ஐந்து வழக்குகளைத் தொடர்ந்திருந்தது.
ஆனால் சமீபத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தி வீரப்பன் விதித்த நிபந்தனையின் பேரில்மூன்று வழக்குகளில் மணிக்கு ஜாமீன் கிடைக்க கர்நாடக அரசு உதவியது.
இருந்தாலும் மற்ற இரண்டு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலா தீர்ப்பளித்தார்.அவர் தன் தீர்ப்பில்,
ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சம் பணத்தை கொளத்தூர் மணி கட்ட வேண்டும். மேலும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளிக்க வேண்டும்.
மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்.
சாட்சிகளை மிரட்டுவது உள்பட அவர்களுக்கு எந்தத் தொல்லையையும் அவர் கொடுக்கக் கூடாது என்றுஉத்தரவிட்டார் நீதிபதி பக்தவச்சலா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications