ஈராக் போர்: இலங்கை அமைதிப் பேச்சு பாதியில் நிறுத்தம்
ஹகோனே:
ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கிருப்பதைத் தொடர்ந்து இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகள்பாதிக்கப்பட்டன. ஜப்பானில் நடந்த 6ம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஆறாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹகோனே நகரில் நேற்று முன்தினம் தொடங்கின.
இரண்டு நாள் பேச்சுக்கள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை மூன்றாவது நாள் பேச்சுக்கள் துவங்க இருந்தன.
ஆனால் ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கிய தகவல் கிடைத்ததும் அமைதிப் பேச்சுக்கள்தடைபட்டன.
ஈராக் போரின் விளைவாக சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதில் கூட பாதிப்பு ஏற்படலாம் என்றுஇலங்கைக்கான சிறப்பு ஜப்பான் தூதர் யாசுஷி அகாசி அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து 6ம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.
வரும் ஜூன் மாதம் இலங்கைக்கான நிதி திரட்டும் மாநாட்டை ஜப்பான் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படுவதற்கு முன் அதிகாரப் பகிர்ந்தளிப்பு, சிறார் புலிகள் மறுவாழ்வு மற்றும்மனித உரிமை விஷயங்கள் தொடர்பாக புலிகளும் இலங்கை அரசு தரப்பினரும் முக்கிய விவாதம் நடத்தினர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் பேசியதை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
ஈராக் தாக்குதலால் சர்வதேச நாடுகளின் பார்வை இலங்கை அமைதிப் பேச்சு நடவடிக்கைகளிலிருந்து திசை திரும்பிவிட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதற்கிடையே ஈராக் போரின் விளைவாக இலங்கையின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிக்கப்படும் சூழ்நிலைஎழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications