கன மழையால் நிலச் சரிவு: ஊட்டி மலை ரயில் நிறுத்தம்
மேட்டுப்பாளையம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச் சரிவின் காரணமாக ஊட்டி மலை ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக நன்றாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக கோயம்புத்தூர்அருகே ரயில் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊட்டி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மண் சரிவு காரணமாக தண்டவாளங்கள் அடைபட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை 7.10மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கி புளூமவுண்டன் ரயில் கிளம்பியது.
ஆனால் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளம் மண் சரிவு காரணமாகமூடப்பட்டுக் கிடந்ததைத் தொடர்ந்து அதற்கு மேல் செல்ல முடியாமல் ரயில் நின்று விட்டது.
இதையடுத்து காலை 10 மணிக்கு அது மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திரும்பி விட்டது. அங்கிருந்து ரயில்பயணிகள் அனைவரும் சிறப்பு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் நிலைமை சீராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications