இந்தியர்களை வெளியேற்ற விமானப் படை விமானங்கள்
பெங்களூர்:
குவைத்தில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணியில் இந்திய விமானப் படையின் விமானங்களும் ஈடுபடுத்தப்படும் எனபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
நாளை குவைத்தில் இருந்து 2,000 இந்தியர்கள் இந்தியா திரும்ப உள்ளனர். இத் தகவலை துபாயில் உள்ள இந்தியத் தூதரகம்தெரிவித்துள்ளது.
முன்னதாக குவைத் மீதான ஈராக்கிய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் குவைத் விமான நிலையம் திடீர் திடீரெனமூடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏர்- இந்தியா தனது பல விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
இப்போது பயணிகளை சவுதி அரேபியாவுக்கு பஸ்கள் மூலம் அழைத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வர ஏர்இந்தியா முடிவு செய்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஏர் இந்தியா விமானம் (எண்: 859) குவைத் புறப்பட்டுச் செல்ல இருந்தது. ஆனால், குவைத் விமான நிலையம்அவசரமாக மூடப்பட்டுவிட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த விமானம் 8.30 மணிக்கு மாற்றப்பட்டது.
ஆனால், தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டதால் பிற்பகல் 3.25 க்குத் தான் இந்த விமானம் இந்தியா புறப்பட்டது.
அதே நேரத்தில் இன்று அதிகாலை ஏர் இந்தியா சிறப்பு ஏர்பஸ் விமானத்தை இயக்கியது. இதில் 9 கைக் குழந்தைகள் உள்பட 138 பயணிகள்குவைத்தில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்னொரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 102 பயணிகளுடன் இன்று காலைஅகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கியது.
அதே போல குவைத் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் குவைத் ஏர்லைன்ஸ் தனது இந்திய விமானத்தை இயக்கியது. இதன்மூலம் சுமார் 268 இந்தியர்கள் இன்று கொச்சி வந்து சேர்ந்தனர். இவர்களில் 40 பேர் குழந்தைகள்.
இதற்கிடையே நாளை மேலும் 2,000 பேர் வரை இந்தியா திரும்ப டிக்கெட்கள் வாங்கியிருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் பஹ்ரைன் போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் மத்தியில் எந்தவிதமான பதற்றமும் இல்லை.
குவைத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் காத்திருப்பதாகவும், இந்தியா போதுமான விமானங்களைஇயக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மட்டும் குவைத்தில் இருந்து 1,235 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications