ஈராக்கிலேயே தங்கிவிட்ட 15 இந்தியர்கள்
துபாய்:
ஈராக்கில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில் கேரளவைச் சேர்ந்த 3 கிருஸ்துவ கன்னியஸ்திரிகளும், 4 இந்தியமாணவர்களும் ஈராக்கிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த கன்னியஸ்திரிகள் அன்னை தெரசா சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாக்தாத் நகரில் போரினால் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்த 4 மாணவர்கள் ஈராக் பல்கலைக்கழகத்தில் இஸ்லாம்குறித்த உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் தவிர 12 இந்தியர்கள் கர்பலா என்ற இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இஸ்லாமிய புனித நகரமான இங்கு வரும்யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களும் இந்தியா திரும்ப மறுத்துவிட்டனர்.
போர் தொடங்க இருந்ததையடுத்து இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறினர். அப்போது இவர்களையும் வெளியேறுமாறுஇந்திய அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், இவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.
ஈரான் சிறப்பு தூதர் இந்தியா வருகை:
ஈராக் மீதான அமெரிக்கப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் அண்டை நாடான ஈரான் அதிபரின் சிறப்புத் தூதர் இன்று திடீரெனஇந்தியா வந்தார். பிரதமர் வாஜ்பாயுடன் அவர் பேச்சு நடத்த உள்ளார்.
ஈராக்குக்கு சமமாக ஈரானையும் எதிர்த்து வருகிறது அமெரிக்கா. ஆனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்ப்பதில் இந்தியாவும்ஈரானும் இணைந்து செயல்பட்டன. இரு நாடுகளும் பல நூறு கோடி மதிப்புள்ள ஆயுதங்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளுக்குவழங்கி தலிபான்களை எதிராக போர் நடத்தின.
இதனால் ஈரான்- இந்தியா உறவு வலுப்பட்டது. இப்போது ஈராக்கில் நடந்து வரும் தாக்குதலை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இந் நிலையில் ஈரானிய அதிபர் சையத் முகம்மத் கதாமி தனது சிறப்புத் தூதர் அலி அக்பர் வெலாயதியை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார்.நேற்றிரவு இந்தியா வந்த அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் என்ன பேசப்பட்டது என்பதைத் தெரிவிக்க இரு தரப்பினரும் மறுத்துவிட்டனர். இன்று அவர் வாஜ்பாயையும் சந்தித்துப் பேசுகிறார்.
37 ஈராக்கியர்கள் படுகாயம்:
இதற்கிடையே இன்று அமெரிக்க விமானங்களும் ஏவுகணைகளும் நடத்திய தாக்குதலில் பாக்தாதில் மட்டும் 37 பேர் பலத்தகாயமடைந்ததாக ஈராக் கூறியுள்ளது.
பெரும்பாலான தாக்குதல்கள் மக்கள் நிறைந்த இடங்களைக் குறி வைத்தே நடந்ததாகவும் ஈராக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications