ஈராக்கில் நுழைந்தது அமெரிக்க தரைப் படை
பாக்தாத்:
அமெரிக்க- பிரிட்டன் தரைப் படைகள் இன்று அதிகாலையில் ஈராக்கில் நுழைந்தன.
ஈராக்கின் தெற்கே குவைத் எல்லையில் இருந்து பாக்தாத் நோக்கி அவை முன்னேறி வருகின்றன. அமெரிக்காவின் 7வது கேவல்ரி படைப்பிரிவின் தலைமையில் மிக நீண்ட பாலைவனப் பகுதியில் இந்தப் படைகளின் பீரங்கிகள், டாங்கிகள், கவச வாகனங்கள் முன்னேறிவருகின்றன.
இந்தப் படைகளுக்குப் பாதுகாப்பாக அமெரிக்க- பிரிட்டிஷ் போர் விமானங்கள் விண்ணில் பறந்த வண்ணம் உள்ளன. ஹெலிகாப்டர்களும்வான் வழி பாதுகாப்பு தந்தவண்ணம் இந்தப் படைகளை முன்னேற்றிச் செல்கின்றன.
திட்டமிடப்பட்டதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே இந்தப் படைகள் ஈராக்கில் நுழைந்துவிட்டன.
பெரும்பாலான இடங்களில் இந்தப் படைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் ஈராக்கியப் படைகள் காட்டவில்லை. சில இடங்களில்மட்டுமே இந்தப் படைகள் மீது ராக்கெட்கள், ஆர்ட்டிலரி துப்பாக்கிகளால் ஈராக் படைகள் தாக்கின.
அதிகாலை 3 மணிக்கு குவைத்தில் இருந்து ஈராக்குக்குள் நுழைந்த இந்தப் படைகள் மணிக்கு சுமார் 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்துமுன்னேறி வருகின்றன. பல கி.மீ. தொலைவில் உள்ள ஈராக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியவாரே இந்தப் படைகள் செல்கின்றன.ஆங்காங்கே இந்த படை வாகனங்கள் நிறுத்தப்பட்டு எரிபொருளும் நிரப்பப்படுகிறது. இதன் பின்னர் தொடர்ந்து ஈராக் நோக்கி இப்படைகள் முன்னேறுகின்றன.
விமானங்கள் இந்தப் படைகளுக்கு முன்னதாகப் பறந்து சென்று அருகில் உள்ள ஈராக்கிய டாங்கிகள் குறித்து தகவல்கள் தருகின்றன.இதையடுத்து ஈராக்கியப் படைகள் மீது தாக்குதல் நடத்தியவண்ணம் இந்தப் படை முன்னேற்றம் உள்ளது.
ஈராக்கிய போர் விமானங்கள் ஏதுவும் கண்ணிலேயே படவில்லை. மேலும் ஊடுருவி வரும் படைகளுக்கு எதிராக பெரிய அளவிலானதாக்குதலிலும் ஈராக் ஈடுபடவில்லை. பாலைவனப் போரைத் தவிர்த்துவிட்டு நகர்ப் பகுதிகளில் அமெரிக்கப் படைகளை எதிர்க்க ஈராக்திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதுவரை அமெரிக்க- பிரிட்டன் படைகள் எந்தப் பிரச்சனையும் இன்றி முன்னேறி வருகின்றன. ஈராக் தலைநகர் பாக்தாதைக் கைப்பற்றஇந்தப் படைகள் சென்று கொண்டுள்ளன. இன்று மாலை வரை சுமார் 70 கி.மீ. தூரம் இந்தப் படைகள் ஈராக் பாலைவனத்துக்குள்நுழைந்துவிட்டன.
அதே நேரத்தில் ஈராக்கின் வடக்குப் பகுதியில் குர்து இனத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்தும் பல பாராசூட் கமாண்டோ படைகளும்ஈராக்குக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இப் பகுதியிலும் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே ஈராக் மீது அமெரிக்க விமானங்களும் ஏவுகணைகளும் தொடர்ந்து இரண்டாம் நாளாக தாக்குதல் நடத்தியவண்ணம்உள்ளன. இன்று காலை முதல் சுமார் 60 குண்டுகளை அமெரிக்க விமானங்கள் வீசியுள்ளன.
இரவில் பாலைவனப் பகுதியிலேயே தங்கிவிட்டு நாளை பாஸ்ரா நகரை இந்தப் படைகள் பின்பற்றும் என்று தெரிகிறது. அதன் பின்னர்இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இந்தப் படைகள் பாக்தாதுக்குள் நுழைந்துவிடும் என்று பிரிட்டிஷ் படைகளின் செய்தித்தொடர்பாளர் அல் லாக்வுட் நிருபர்களிடம் குவைத்தில் தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications