ஜப்பான்: புலிகள்- இலங்கை பேச்சு முடிவடைந்தது
ஹகோனே:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஜப்பானில் நடைபெற்ற 6வது சுற்றி அமைதிப்பேச்சுவார்த்தைகள் இன்று முறைப்படி நிறைவு பெற்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே உள்ள ஹகோனே என்ற நகரில் கடந்த 18ம் தேதி நான்கு நாள்பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
கடந்த வாரத் துவக்கத்தில் யாழ்ப்பாணக் கடல் பகுதியில் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படையினர் தகர்த்துமூழ்கடித்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளையே புறக்கணிக்கப் போவதாகமுதலில் புலிகள் எண்ணி இருந்தனர்.
ஆனாலும் அமைதிப் பேச்சுக்கள் ஜப்பானில் சுமூகமான முறையில் தொடங்கின. இதுபோன்ற சம்பவங்கள் இனிநடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதல் நாள் பேச்சுக்களின் போது முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது நாள் பேச்சுக்களும் தொடர்ந்து நடந்தன. வட, கிழக்கு இலங்கையில் வாழும்தமிழர்களின் மறு வாழ்வு குறித்து அன்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பேச்சுக்கள்பாதிக்கப்பட்டன. மேலும் நேற்றைய பேச்சுக்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
மேலும் இன்று காலையிலும் இலங்கை கடல் பகுதியில் சீன கப்பல் ஒன்றை புலிகள் தகர்த்ததாகக் கூறப்படும்சம்பவத்தில் அதிலிருந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஆறாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறைப்படி முடித்து வைக்கப்பட்டன.நேற்றும் இன்றும் முக்கியமான விவகாரங்கள் எதுவும் பேசப்படவில்லை.
இதனால் மனித உரிமை தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களிலும் இரு தரப்பினருக்கும்இடையே ஒப்பந்தங்கள் ஏற்படவில்லை என்று அரசு சார்பில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சரான ராப் ஹக்கீம்இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறஉள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications