மின் கட்டண உயர்வு: பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும்போது, மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகள்வெளிநடப்பு செய்தன. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவும்வெளிநடப்பு செய்தது.
2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொன்னையன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் தாக்கல் செய்வதற்கு முன்பே சட்டசபை திமுக தலைவரான அன்பழகன் எழுந்து, மின் கட்டணஉயர்வு மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது ஆகியவை குறித்து விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் சபாநாயகர் காளிமுத்து அதற்கு அனுமதி அளிக்க மறுத்தார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும்எழுந்து ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப முயன்றனர். அவர்களுக்கும் காளிமுத்து அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத்தொடர்ந்து பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இவர்களுடன் கே.என். லட்சுமணன் தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போதுதான் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்களைப் பார்த்த முதல்வர்ஜெயலலிதா, என்ன அனைவரும் திராவிடர் கழகத்தில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டபோது, அவையேசிரிப்பலையில் மூழ்கியது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications