தமிழக கடலில் மீன் பிடித்த 6 இலங்கை தமிழ் மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தஇலங்கையைச் சேர்ந்த 6 தமிழ் மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் கைதுசெய்தனர்.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடல் பகுதியில் அந்நாட்டு மீனவர்கள் மற்றும்கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

சமீபத்தில் அதுபோல் ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 139 மீனவர்கள் இலங்கைசிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்களில் 21 பேரைத் தவிர அனைவரும் விடுதலைசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்கள்இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

நான்கு நாட்களுக்கு முன் 19 இலங்கை மீனவர்கள் தூத்துக்குடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் சிங்களர்கள்.

இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும 6 இலங்கைமீனவர்களை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இந்த ஆறு பேருமேதமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது.

கடலோரக் காவல் படையினர் அந்த ஆறு இலங்கைத் தமிழ் மீனவர்களையும் மண்டபம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாங்கள் வழி மாறி வந்து விட்டதாகவும், வேறு நோக்கம் எதுவும் இல்லை என்றும் அந்த ஆறுமீனவர்களும் போலீஸாரிடம் தெரிவித்தனர். இருப்பினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+