என்ன நடக்கிறது காங்கிரஸில்?: குமரி அனந்தன் குமுறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைவர்களிடையே நடக்கும் அறிக்கைப் போர், நிர்வாகிகள் நியமனம், நீக்கம் ஆகியசெய்திகளால் கட்சியில் என்ன நடக்கிறது என்று தொண்டர்கள் குழம்பிப் போயுள்ளனர் என்றுகாங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சில நிர்வாகிகளை நியமிப்பதாக, மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கிறார்கள். அப்படி நியமிக்கஉரிமை இல்லை என்று கூறி அவர்களை நீக்கி, மாநிலத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன்அறிவிக்கிறார். அவர் அவ்வாறு கூற உரிமையில்லை என்று செயல் தலைவர் இளங்கோவன்கூறுகிறார்.

இதனால் காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதில் தொண்டர்களுக்கு குழப்பம்ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைவர்களுக்கிடையே நடக்கும் அறிக்கைப் போர், பேட்டிகளால்தொண்டர்கள் குமுறிக் கொண்டுள்ளனர்.

கட்சியின் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அந்த இரு தலைவர்களுக்குமே அதிகாரம்இல்லை. ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் என்ற முறையில் என்னிடம் மட்டுமே அந்தஅதிகாரம் உள்ளது.

மாநிலத் தலைவருக்கும், செயல் தலைவருக்கும் அதிகாரம் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவை தலைவர் சோனியா காந்தி அமைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே?

கட்சி வளர்ச்சியை மனதில் கொண்டு மாநிலத் தலைவரும், செயல் தலைவரும் செயல்பட வேண்டும்என்பதே தொண்டர்களைப் போல என்னுடைய ஆசையும் என்று கூறியுள்ளார் குமரி அனந்தன்.

மேலும் 3 நிர்வாகிகளுக்கு சோ.பா. கல்தா:

இதற்கிடையே ஏற்கனவே நான்கு மாவட்டத் தலைவர்களை நீக்கியுள்ள நிலையில் மேலும் 3மாவட்ட நிர்வாகிகளை நீக்கியுள்ளார் சோ.பா.

விருதுநகர் மாவட்ட தலைவர் கணேசன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சேகரன் மற்றும்காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரையும் அந்தப்பதவிகளிலிருந்து சோ.பா. தூக்கியுள்ளார்.

இவர்கள் அனைவருமே இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலையிலேயே சோனியாவைச் சந்திப்பதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார்இளங்கோவன். இன்று பகலில் சோ.பா. டெல்லி கிளம்பிச் சென்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+