""ஏர் பிடிக்கும் விவசாயிகள் போர் முனைக்கு வந்தால்...""
திருச்சி:
ஏர் பிடிக்கும் விவசாயிகள் போர் முனைக்கு வந்தால் அதை அதிமுக அரசால் தாங்கிக் கொள்ளமுடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி எழுதிய "தொல்காப்பியப் பூங்கா" நூலின் 4ம் பதிப்பு நேற்று இரவு திருச்சியில்வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
தமிழகத்தில் மின் கட்டணங்களை ஜெயலலிதா அரசு உயர்த்தியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கானஇலவச மின்சாரத்தையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இதையெல்லாம் விவசாயிகள் கடுமையாக எதிர்த்துப் போராட ஆரம்பித்தால் அரசின் கதி என்னஆகும்?
ஏர் பிடிக்கும் விவசாயிகள் போர் முனைக்கு வந்தால் அதைத் தமிழக அரசால் தாங்கிக் கொள்ளவேமுடியாது.
மக்கள் இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில்அதிமுகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்றார் கருணாநிதி.
தமிழக பா.ஜ.கவுடன் உறவா?
இதற்கிடையே இன்று நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் போக்கைக் கண்டித்து அதிலிருந்து திமுக போன்ற கட்சிகள்வெளியேற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்.
கடந்த 21ம் தேதி எதிர்க் கட்சிகளுடன் பா.ஜ.கவும் சேர்ந்து வெளிநடப்பு செய்துள்ளது. அதற்காகதமிழக பா.ஜ.கவுடன் மீண்டும் நாங்கள் சேருவோம் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.தமிழகத்தில் அந்தக் கட்சியுடனான உறவு முறிந்தது முறிந்ததுதான்.
ஆனால் மத்திய பா.ஜ.கவுடன் உறவு சுமூகமாகவே உள்ளது. பா.ஜ.க. தலைவர்கள், மத்தியஅமைச்சர்கள் சென்னை வரும்போது என்னைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர். தொலைபேசிமூலமாகவும் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
வைகோ விடுதலை கோரி மத்திய அரசிடம் எங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தி விட்டோம்.இனி அவர்கள்தான் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை விவகாரம் தொடர்பான விஷயங்களில் மத்திய வெளியுறவுத் துறை எடுத்து வரும்நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்றார் கருணாநிதி.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications