மேட்டூர் அணையில் நீர் மட்டம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடாததாலும் பருவ மழை பொய்த்ததாலும் மேட்டூர் அணைவரலாறு காணாத அளவுக்கு வறண்டது. வெறும் குட்டை போலவே அது காட்சி அளித்தது.

மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகளும் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர். குறுவை மற்றும் சம்பா ஆகிய இரண்டு சாகுபடிகளுமே முழுமையாகப்பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த வாரம் சில நாட்கள் தமிழகத்தில் கோடை மழை பெய்யத் தொடங்கியது. காவிரிநீர் பிடிப்புப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது.

இதையடுத்து மேட்டூர் அணையில் நீர் மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்குவினாடிக்கு 2,236 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணையில் தற்போது 29.08 அடி நீர் உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்தால் அணையின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+