துருக்கியைத் தாக்கிய அமெரிக்க ஏவுகணைகள்

Subscribe to Oneindia Tamil

அங்காரா:

அமெரிக்க போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இரு டாமஹாக் ஏவுகணைகள் துருக்கி நாட்டின் மீது விழுந்துவெடித்தன. இதில் யாரும் பலியானார்களா என்று தெரியவில்லை.

ஈராக் மீதான போரில் அமெரிக்காவை துருக்கி ஆதரித்து வருகிறது. அதே நேரத்தில் ஈராக்கின் வட பகுதியில்குர்து இனத்தினர் நிறைந்த இடங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவும் துருக்கி முயல்கிறது.

இதற்காக 1,000 கமாண்டோக்களையும் ஈராக்கின் வட பகுதிக்குள் அனுப்பியுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந் நிலையில் இரு அமெரிக்க ஏவுகணைகள் துருக்கியின் சலியுர்வா, விரான்செகிர்ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்து வெடித்தன.

ரசாயன ஆயுத தொழிற்சாலை?:

இதற்கிடையே தொடர்ந்து ஈராக்குக்குள் முன்னேறி வரும் அமெரிக்கப் படைகள் பாக்தாதின் தென் பகுதியில் நசாப்எனற இடத்தில் ஒரு ரசாயன ஆயுத ஆலையைக் கண்டுபிடித்துள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.

இந்த ஆலையைப் பாதுகாத்து வந்த 120 ஈராக்கிய வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஈராக்கிய தூதர்கள் வெளியேற்றம்:

இந் நிலையில் ஜோர்டனும் பிலிப்பைன்சும் தங்களது நாட்டில் இருந்த ஈராக்கிய தூதர்களை நாட்டை விட்டுவெளியேற்றியுள்ளன.

இந்த இரு நாடுகளும் அமெரிக்காவை ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலிய விலை உயர்வு:

அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதையடுத்து சர்வசேத சந்தையில் கச்சாஎண்ணெயின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+