For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக் எதிர் தாக்குதல் தீவிரம்: அமெரிக்க படைகளின் வேகம் குறைந்தது

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

ஈராக்கியப் படைகளின் தாக்குதலில் சுமார் 25 வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அமெரிக்கத்தரைப் படையினர் தொடர்ந்து பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர். ஆனால், முதல் 3 நாட்கள் இருந்த வேகம்இப்போது இல்லை.

ஈராக்கியப் படைகள் எதிரபார்த்தைவிட மிகத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு வருவதால் கடும் எதிர்ப்பைச்சந்தித்து வருகின்றன அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள். பல இடங்களில் இந்தப் படைகளை ஈராக்கியப் படைகள்தடுத்து நிறுத்திவிட்டன. இதனால் மிக மெதுவாகவே இந்தப் படைகளின் முன்னேற்றம் உள்ளது.

தரைப் படைகளுக்கு உதவியாக பாக்தாத் நகரின் மீது அமெரிக்க- பிரிட்டிஷ் போர் விமானங்கள் நேற்று இரவில்இருந்து மிகக் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில்320 மக்கள்காயமடைந்துள்ளதாகவும் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் ஜெர்மனியின் ஏ.டி.ஆர். டிவி கூறியுள்ளது.

அமெரிக்காவின் மெரைன் படைப் பிகிவு இன்று பாக்தாதின் தெற்கே 80 கி.மீ. தொலைவு வரை ஊடுருவி விட்டன.கர்பலா என்ற இஸ்லாமிய புனித நகரை அமெரிக்கப் படைகள் நெருங்கி வருகின்றன.

இங்கு ஈராக்கியப் படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே மிக பலத்த மோதல் நடந்து வருகிறது.நேற்று நசிரியா நகரில் தான் அமெரிக்கப் படைகளுக்கு முதல் உயிர்ப் பலிகள் ஏற்பட்டன.

இங்கிருந்த 500 ஈராக்கிய வீரர்கள் டாங்கிகள், பீரங்கிகளுடன் அமெரிக்கப் படைகளை பயங்கரமாகத் தாக்கின.இதில் அந்த இடத்திலேயே பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலரை ஈராக் படைகள் சிறைபிடித்துள்ளன.

ஈராக் படைகளின் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்ததால் போர் விமானங்களின் உதவியை அமெரிக்கப் படைகள்நாடின. இதையடுத்து பிரிட்டனின் டொர்னடோ விமானங்கள் ஈராக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்திஅவர்களை சிதறடித்தன.

இதன் பின்னர் தான் அமெரிக்கப் படைகளால் முன்னேறிச் செல்ல முடிந்தது. தொடர்ந்து ஆங்காங்கே அமெரிக்கப்படைகளுக்கு எதிராக பலத்த தாக்குதல் நடந்தாலும் அவர்கள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளனர்.

அதே போல 3 தினங்களுக்கு முன் உம் கஸ்ஸர் நகரைப் பிடித்துவிட்டதாக பிரிட்டிஷ் படைகள் கூறினாலும் இன்றுவரை இங்கு பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து ஈராக்கியப் படைகள் போராடி வருகின்றன.

இதற்கிடையே பாக்தாத் மீது மிகக் கடும் குண்டு வீச்சுத் தாக்குலும் ஏவுகணைத் தாக்குதலும் நடந்து வருகிறது.ரிபப்ளிகன் படைகளின் தலைமையகம், அதிபர் சதாம் ஹூசேனின் இரு வீடுகள் இன்று தரைமட்டமாக்கப்பட்டன.

போர் தொடங்கியதில் இருந்து பாக்தாதில் இன்று தான் பகல் நேரத்தில் இவ்வளவு பயங்கரமான குண்டுவீச்சுத்தாக்குதல் நடந்தது. நேற்றிரவில் இருந்து இன்று காலை வரை மட்டும் 320 ஏவுகணைகள் தலைநகர் பாக்தாதைத்தாக்கியுள்ளன. மேலும் பாஸ்ரா நகர் மீதும் அமெரிக்க விமானங்கள் இன்று பயங்கர குண்டுகளால் தாக்கின.

போர் தாங்கள் திட்டமிட்டபடியே நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். உயிர்ச்சேதங்கள் கவலை தந்தாலும் கூட சதாம் ஹூசேனின் ஆட்சியை நீக்கும் பணியை அமெரிக்கா செய்து முடிக்கும்என்றார்.

இதற்கிடையே பாக்தாத் நோக்கி முன்னேறி வரும் அமெரிக்காவின் 3வது இன்பான்ட்ரி படைகளின் 2வது பிரிவுகடந்த 40 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 370 கி.மீ. தூரம் ஈராக்குக்குள் ஊடுருவியுள்ளது. நூற்றுக்கணக்கானடாங்கிகள், கவச வாகனங்கள், லாரிகளுடன் இந்தப் படை முன்னேறி வருகிறது.

இந்தப் படைகளை ஹெலிகாப்டர்கள் வழி நடத்தி வருகின்றன. இந்தப் படைக்கு உதவியாக சில பிரிட்டிஷ் படைப்பிரிவுகளும் பாராசூட்கள் மூலம் கர்பலா அருகே தரையிறக்கப்பட்டன. கவன வாகனங்களும் கூடஹெலிகாப்டர்கள் மூலம் இங்கு தரையிறக்கப்பட்டன.

இந்தப் படைகள் நஜாப் நகரில் தங்களை எதிர்த்த 100 ஈராக்கிய வீரர்களை சுட்டு வீழ்த்திவிட்டு முன்னேறின. இருஈராக்கிய கமாண்டர்களையும் சிறை பிடித்தன. மிக விரைவில் பாக்தாதைப் பிடிப்போம் என அமெரிக்கப்படைகளின் துணைத் தலைரான லெப்டினன்ட் ஜெனரல் ஜான் அபிஸெய்ட் கூறினார்.

இதற்கிடையே தெற்கு ஈராக்கில் முன்னேறி வரும் படைகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ஈராக்கிய டாங்கிகளைதகர்க்க விமானியில்லாமல் இயங்கும் பிரிடேட்டர் ரக விமானங்களையும் அமெரிக்கா பயன்படுத்தஆரம்பித்துள்ளது. பாக்தாத் மட்டுமல்லாமல் வட பகுதியில் உள்ள கிர்குக், சம்சமால் ஆகிய நகர்களும் பலத்தகுண்டுவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

பாக்தாதுக்குள் இன்று காலை முதல் பிற்பகல் வரை மிக அதிக சக்தி கொண்ட 6 குண்டுகளை அமெரிக்கவிமானங்கள் வீசின.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X