25 அமெரிக்க வீரர்கள் சாவு: 5 வீரர்களை சிறை பிடித்தது ஈராக், 12 பேரை காணவில்லை
நசிரியா:
![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
ஈராக்கின் தெற்கு நகரான நசிரியாவில் நடந்த பயங்கர சண்டையில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காகூறியுள்ளது. மேலும் 5 வீரர்களை ஈராக்கியப் படைகள் சிறை பிடித்துள்ளன. இவர்கள் தவிர மேலும் 10அமெரிக்க வீரர்களையும் 2 பிரிட்டிஷ் வீரர்களையும் காணவில்லை.
இந்த 8 அமெரிக்க, பிரிட்டிஷ் வீரர்களும் கூட ஈராக் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், நசிரியாவில் நடந்த தாக்குதலில் 25 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் கூறியுள்ளது.
முன்னேறி வரும் அமெரிக்கப் படைகளை ஈராக்கிய ரிபப்ளிகன் கமாண்ட் படையினர் தீவிரமாக எதிர்த்துத் தாக்கிவருகின்றனர். நசிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் மிகத் தீவிரசண்டை நடந்தது.
அமெரிக்கப் படைகள் தாக்கியதில் பல அப்பாவி ஈராக்கிய மக்கள் பலியாயினர். இதையடுத்து அமெரிக்கப்படைகள் மீது ஈராக் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவின் பல டாங்கிகளை ஈராக் வீரர்கள்சிதறடித்தனர்.
மேலும் அமெரிக்கப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையும் நடத்தினர். இதில் 11 அமெரிக்க வீரர்கள்கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் 25 பேர் கொல்லப்பட்டதாக ஈராக்கும் கூறியுள்ளன. மேலும் ஒரு பெண்உள்பட 5 பேரை ஈராக்கியப் படைகள் சிறை பிடித்தனர்.
கொல்லப்பட்ட 11 வீரர்களில் 7 பேர் போர் முனையில் கொல்லப்பட்டதாகவும் மேலும் 4 பேரை ஈராக்கிய வீரர்கள்வரிசையாக நிற்க வைத்து சுட்டதாகவும் 5 பேரை மட்டும் உயிரோடு விட்டு வைத்து டிவியில் காட்டியதாகவும்அமெரிக்கா கூறியுள்ளது.
நசிரியாவில் நடந்த இந்த பயங்கர மோதலில் 50க்கும் மேற்படட அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.காயமடைந்த வீரர்களை ஹெலிகாப்டர்கள் அங்கிருந்து வெளியேற்றின. கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கும்மேலாக இந்தச் சண்டை நீடித்தது.
காயமடைந்த இந்த அமெரிக்க வீரர்கள் குவைத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஜெர்மனியில் உள்ளரம்ஸ்டெயின் விமான தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள நேடோ கூட்டமைப்பின் ராணுவமருத்துவமனைகளில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
-->

















Click it and Unblock the Notifications