சிரியா நாட்டில் பஸ்ஸை தாக்கி 5 பேரை கொன்ற அமெரிக்க ஏவுகணை
டமாஸ்கஸ்:
அமெரிக்க ஏவுகணை சிரியா நாட்டில் ஒரு பஸ்ஸைத் தாக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர்படுகாயமடைந்தனர். ஈராக்கிய எல்லை அருகே இச் சம்பவம் நடந்தது.
அதே போல அமெரிக்க போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இரு டாமஹாக் ஏவுகணைகள் துருக்கிநாட்டைத் தாக்கின.
ஈராக்கில் இருந்து தப்பி அகதிகளாக வெளியேறும் மக்களை அழைத்துக் கொண்டு அந்த பஸ் சிரியா நாட்டுத்தலைநகர் டமாஸ்கசுக்குச் சென்று கொண்டிருந்தபோது அதை அமெரிக்க ஏவுகணைத் தாக்கியது.
இந்தப் போரை சிரியா எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில்...
அதே போல அமெரிக்க போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இரு டாமஹாக் ஏவுகணைகள் துருக்கி நாட்டின்மீது விழுந்து வெடித்தன. இதில் யாரும் பலியானார்களா என்று தெரியவில்லை.
ஈராக் மீதான போரில் அமெரிக்காவை துருக்கி ஆதரித்து வருகிறது. அதே நேரத்தில் ஈராக்கின் வட பகுதியில்குர்து இனத்தினர் நிறைந்த இடங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவும் துருக்கி முயல்கிறது.
இதற்காக 1,000 கமாண்டோக்களையும் ஈராக்கின் வட பகுதிக்குள் அனுப்பியுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந் நிலையில் இரு அமெரிக்க ஏவுகணைகள் துருக்கியின் சலியுர்வா, விரான்செகிர்ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்து வெடித்தன.
ரசாயன ஆயுத தொழிற்சாலை?:
இதற்கிடையே தொடர்ந்து ஈராக்குக்குள் முன்னேறி வரும் அமெரிக்கப் படைகள் பாக்தாதின் தென் பகுதியில் நசாப்எனற இடத்தில் ஒரு ரசாயன ஆயுத ஆலையைக் கண்டுபிடித்துள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.
இந்த ஆலையைப் பாதுகாத்து வந்த 120 ஈராக்கிய வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இந் நிலையில் ஈராக் மீதான தாக்குதலில் முதல்முறையாக ஆஸ்திரேலிய வீரர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கிய தூதர்கள் வெளியேற்றம்:
இந் நிலையில் ஜோர்டனும் பிலிப்பைன்சும் தங்களது நாட்டில் இருந்த ஈராக்கிய தூதர்களை நாட்டை விட்டுவெளியேற்றியுள்ளன.
இந்த இரு நாடுகளும் அமெரிக்காவை ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலிய விலை உயர்வு:
அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதையடுத்து சர்வசேத சந்தையில் கச்சாஎண்ணெயின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications