நாளை அமெரிக்கா விரைகிறார் டோனி பிளேர்
வாஷிங்டன்:
ஈராக் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் விவாதிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதமர்டோனி பிளேர் நாளை வாஷிங்டனுக்குச் செல்ல இருக்கிறார்.
போர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், போருக்குப் பிந்தைய ஈராக் நிலைகுறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
போருக்குப் பின் ஈராக் தொடர்பான விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிக அளவில்கவனம் செலுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்த உள்ளனர்.
போருக்கு முன் ஒரு பிரிட்டிஷ் அமைச்சரும் இரண்டு எம்.பிக்களும், போருக்குப் பின்னர் நேற்றுஒரு மூத்த அதிகாரியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்ட போதிலும் இந்தப் போரினால்பிரிட்டனில் பிளேருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்துக் கொண்டே போவதாகத்தான்தெரிகிறது.
அதிலும் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் ஈராக் தலைநகரான பாக்தாத்தை நெருங்க நெருங்க புஷ்,பிளேரின் புகழ் அதிகரித்துக் கொண்டே செல்வதாகக் கூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications