மர்ம நோய் அபாயம்: சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல்
சிங்கப்பூர்:
சீனா, ஹாங்காங், வியட்நாம், சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் 50க்கும் மேற்பட்டஉயிர்களைப் பலி வாங்கியுள்ள மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்துசிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மர்ம நோய் தோன்றியது. முதலில் இது என்ன நோய்,எப்படிப் பரவுகிறது என்பதே தெரியாமல் இருந்து வந்தது. பின்னர் கொடிய நிமோனியா வகையைச்சேர்ந்த நோய்தான் இது என்பது தெரிய வந்தது.
மெல்ல மெல்லப் பரவிய இந்த நோயால் சீனாவில் மட்டும் இதுவரை 31 பேர் உயிரிழந்ததுள்ளனர்.மேலும் சுமார் 800 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிங்கப்பூர், ஹாங்காங், வியட்நாம் மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவத்தொடங்கியது. அந்த நாடுகளில் 18 பேர் உயிரை வாங்கியுள்ளது இந்த நோய்.
தெற்கு சீனாவில் உள்ள காங்டாங் மாகாணத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி தோன்றியதாகக்கருதப்படும் இந்த நோய் தற்போது ஜப்பானிலும் பரவத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 1,323 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரநிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
வைரஸ் மூலம் பரவும் இந்த நிமோனியா நோய் விமானப் பயணிகள் மூலம் மிகவும் எளிதாகப்பரவிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து உலகில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில்நோய்த் தடுப்புக்கான அவசர மருத்துவக் குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
சாதாரணமாக இருமினால் கூட மற்றவர்களைத் தொற்றிக் கொள்ளும் இந்த வைரஸ் நோய்காரணமாக சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் தற்போதுதான் சிங்கப்பூரில் ஒட்டுமொத்தப் பள்ளிகளும்மூடப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தங்கள் நாட்டில்தான் இந்த நோய் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் கூறுவதைசீனா மறுத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications