அமெரிக்க ராணுவத்தை தாக்கும் ஈராக் தற்கொலை படைகள்
பாக்தாத்:
அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை தங்களது தற்கொலைப் படைப் பிரிவுகள் தாக்க ஆரம்பித்துள்ளதாக ஈராக்கூறியுள்ளது.
இந்தப் படைகளின் தாக்குதலில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருவதாகஈராக்கிய ராணுவச் செய்தியாளர் அந் நாட்டு டிவியில் கூறினார். விமானங்கள் நடத்திய தாக்குதலால் ஈராக்கியடிவி நிலையம் சிதறடிக்கப்பட்டது.
இதனால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்று இரவு மீண்டும் தனது ஒளிபரப்பை ஈராக் தொடங்கியது.
அதில் பேசிய ராணுவச் செய்தித் தொடர்பாளர், நஜாபில் அமெரிக்கப் படைகளுக்கு பெரும் உயிர்ச் சேதம்ஏற்பட்டுள்ளது. ஈராக்கிய தற்கொலைப் படைகளே இதற்குக் காரணம். பாஸ்ராவில் இன்னொரு பிரிட்டிஷ்ஹெலிகாப்டரையும் இந்தப் படை வீழ்த்தியுள்ளது.
மேலும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளின் 11 டாங்க்குகள், 12 சப்ளை வாகனங்களையும் தகர்த்துள்ளோம்என்றார்.
நஜாப் நகரில் 1,000 ஈராக்கிய வீரர்களைக் கொன்றுள்ளதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு ஆதரவான குர்து இனப் போராளிகளைத் தாக்க ஈராக்கிய தற்கொலைப் படைகள்வடக்கு நோக்கி முன்னேறி வருகின்றன. இதையடுத்து அமெரிக்க உதவியை குர்து இன போராளிகள்கோரியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் இந்த ஈராக்கிய தற்கொலைப் படையினர் மறைந்துள்ள பகுதிகளில்குண்டு வீச்சுத் தாக்குதலை தொடங்கியுள்ளன. குறிப்பாக சுலைமானியா, கிர்குக் ஆகிய இடங்களில் இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications