ஈராக்கின் வட பகுதியில் அமெரிக்க பாரா கமாண்டோ படை தரையிறங்கியது
நஜாப்:
அமெரிக்காவின் பாரா கமாண்டோ படையினர் சுமார் 1,000 பேர் வடக்கு ஈராக்கில் தரையில் குதித்துள்ளனர்.
குர்து இனத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஈராக் பகுதியில் இறங்கிய அவர்கள் அங்குள்ள ஒரு விமானதளத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் விரைவில் இந்த விமான தளத்தில் பீரங்கிகள், டாங்கிகள்,வாகனங்களை அமெரிக்கப் படைகள் விமானங்கள் மூலம் கொண்டு வந்து குவிக்கும் என்று தெரிகிறது.
தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தான் இதுவரை பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் முன்னேறி வருகின்றன.இப்போது தான் முதன்முறையாக வடக்கு ஈராக்கிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. முதலில் துருக்கியில் இருந்துதரைவழித் தாக்குதல் நடக்க அமெரிக்கா திட்டமிட்டது.
ஆனால், இதற்கு துருக்கி நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தங்கள வான் பகுதியை மட்டுமேபயன்படுத்த அமெரிக்காவுக்கு துருக்கி அனுமதி தந்தது. தரைப் படைகளை துருக்கிக்கு கொண்டு வர அநா நாட்டுஅரசு அனுமதி தரவில்லை.
இப்போது இந்தப் போராளிகளையும் சேர்த்துக் கொண்டு வடக்கு ஈராக்கில் இருந்து பாக்தாத் நகர் நோக்கிஅமெரிக்கப் படைகள் முன்னேறும் என்று தெரிகிறது.
ஈராக் படைகள் முன்னேற்றம்:
இந் நிலையில் பாக்தாத் நகரில் இருந்து 120 டாங்கிகளுடன் பெரும் எண்ணிக்கையிலான ஈராக்கியப் படைகள்நஜாப் நகரில் உள்ள அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றன.
இந்தப் படைகளை நேற்றிரவு அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இதில் பல ஈராக்கிய டாங்கிகள்சிதைந்தன. ஆனாலும் இந்தப் படைகள் தொடர்ந்து பாஸ்ராவை நோக்கி முன்னேறி வருகின்றன. இதில் 1,000ஈராக்கிய கவச வாகனப் படைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நஜாப் நகரில் அமெரிக்காவின் 3வது இன்பான்ட்ரி படை நிலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஸ்ராவில் சண்டை நீடிக்கிறது:
பாஸ்ரா நகர் தங்களது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக கூறிய பிரிட்டிஷ் படைகள் இன்னும் தொடர்ந்து ஈராக்கியப்படைகளின் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டுள்ளன. இங்குள்ள ஈராக்கியப் படைகள் பொது மக்களைப் போலசாதாரண உடைகளில் வந்து தாக்குதல் நடந்தி வருவதாக பிரிட்டன் கூறியுள்ளது.
சில இடங்களில் வெள்ளைக் கொடிகளை ஆட்டி தங்களை அருகில் வரவைத்து ஈராக்கிய வீரர்கள் தாக்குவதாகபிரிட்டனின் எக்ஸ்பிடியேட்டரி யூனிட் படைகள் கூறியுள்ளன. ஈராக்கியப் படைகள் கொரில்லா முறையில் தாக்கிவருவதால் பாஸ்ரா நகருக்குள் நுழைய இந்தப் படைகள் இன்று காலை வரை முன் வரவில்லை. புற நகர் பகுதியில்தான் இந்தப் படைகள் நின்று கொண்டு பீரங்கிகள், டாங்கிகளால் அந்த நகரை நோக்கி குண்டுகளை வீசித் தாக்கிவருகின்றன.
மேலும் 2 பிரிட்டன் வீரர்கள் கொலை:
இதற்கிடையே மேலும் 2 பிரிட்டன் வீரர்களை ஈராக்கியப் படைகள் பிடித்துள்ளன. இவர்களை அல் ஜசீராதொலைக் காட்சி காட்டியது. இந்த இருவரும் கென்யாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிட்டிஷ் ராணுவடிரக்குகளின் டிரைவர்கள் என்றும் தெரிகிறது.
இது தவிர மேலும் இரு பிரிட்டிஷ் வீரர்களின் சிதைந்த உடல்களையும் அல் ஜசீரா காட்டியது. இவர்கள் பாஸ்ராஅருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications