முன்னாள் புதுவை முதல்வரின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி -நெல்லித்தோப்பு சட்டசபைத் தொகுதியிலிருந்து முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996 ஏப்ரல் 27ம் தேதி பாண்டிச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில்நெல்லித்தோப்பு தொகுதியில் ஜானகி ராமன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டி. ராமச்சந்திரன் இந்த வெற்றியை எதிர்த்துஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில்,

ராஜ்பவன் சட்டசபைத் தொகுதியில் வசிப்பவர் ஜானகி ராமன். ஆனால் முறைகேடான வகையில்தனது பெயரை நெல்லித்தோப்பு வாக்காளர் பட்டியலிலும் சேர்த்து விட்டார்.

இது தவிர தேர்தல் பிரச்சாரத்தின்போது தனி மனித ஒழுங்குக்கு கேடு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார். வாக்காளர்களைக் கவர பல்வேறு முறைகேடான செயல்களிலும் ஜானகி ராமன்ஈடுபட்டார் என்று மனுவில் கூறியிருந்தார் ராமச்சந்திரன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் தன் தீர்ப்பில்,

ஒருவரது பெயர் இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது சட்டப்படி மோசமானசெயல் அல்ல.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு காரணமாக ஒருவரது தேர்தல் வெற்றியை செல்லாது என்றுஅறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.

மேலும் ராமச்சந்திரன் தனது வழக்குக்குத் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறி விட்டார்.வாய் மூலமாகவும், ஆவணங்கள் மூலமாகவும் அவர் தன் புகாரை நிரூபிக்கத் தவறியதால் ஜானகிராமன் தேர்வு செல்லும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றார் நீதிபதி சொக்கலிங்கம்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+