தீவிரவாதி ராஜாராமனின் உடலைப் பெற உறவினர்கள் மறுப்பு
தேனி:
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைப் படைத் தலைவர் ராஜாராமனின் உடலைப்பெற்றுக் கொள்ள அவருடைய உறவினர்கள் மறுத்து விட்டனர்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தில்தான் ராஜாராமனின் உறவினர்கள், குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். அவருடைய சகோதரர் சுப்புராஜ் கூறுகையில்,
சென்னைக்குச் சென்று ராஜாராமனின் உடலைப் பெற்று, அடக்கம் செய்வதற்கு எங்களிடம் போதியபண வசதி இல்லை.
எனவே நாங்கள் சென்னை சென்று அவருடைய உடலைப் பெற மாட்டோம். ஆனால் உடலைஇங்கே கொண்டு வந்து கொடுத்தால் நாங்கள் பெற்றுக் கொள்வோம் என்றார்.
இதேபோல ராஜாராமனுடன் சேர்ந்து உயிரிழந்த சரவணனின் குடும்பத்தாரும் நிதிப் பிரச்சினைகாரணமாக சென்னை சென்று உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.சரவணனின் குடும்பத்தினர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.
ராஜாராமன் கொலை- 6 தனிப் படைகள்:
இதற்கிடையே ராஜாரமன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தப்பியோடிய கும்பலைப்பிடிக்க 6 தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், ராஜாராமன் சென்னை மத்திய சிறையில்இருந்தபோது, சில புது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அவர்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான சதித் திட்டங்களை ராஜாராமன் தீட்டியிருந்ததாகத்தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாகவே ராஜாராமனைத் தப்பிக்க வைக்க முயற்சி நடந்தது. அந்த முயற்சியின்போதுதான் ராஜாராமனும் சரவணனும் இறந்துள்ளனர்.
குவாலிஸ் காரில் மூன்று பேர் வரை இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களைப் பிடிக்கமொத்தம் ஆறு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு படை பெங்களூருக்குவிரைந்துள்ளது.
இது தவிர மதுரை, பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மற்ற தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றார் விஜயகுமார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications