ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம்
சென்னை:
குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் என்றாலே பெண்களைத்தான் முக்கிய இலக்காக அரசுகருதுகிறது.
ஆனால் ஆண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது தொடர்பாக தீவிர பிரசாரம் செய்தால் என்னஎன்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில்,
குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்களுக்கு பெண்களைத்தான் அதிக அளவில் கூட்டி வருகிறார்கள்.ஆனால், ஆண்களுக்கு அரசு அழைப்பு விடுவதில்லை. ஆண்களுக்கான கருத்தடை முறையானவாசக்டமியை பிரபலப்படுத்துவதற்கு அரசு ஏன்முயற்சிக்கக்கூடாது என்றார்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, ஆண்களுக்கு வாசக்டமி அறுவைசிகிச்சை செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அவர்கள் அதிகம் முன் வருவதில்லை. கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு 4,000 குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்கள் அதிகம்செய்யப்பட்டுள்ளன என்றார்.
குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்த பிறகும் பலருக்குக் குழந்தைகள் பிறப்பது குறித்துஇந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
இது மிகவும் அரிதானது. 1000ல் ஒருவருக்கு 10,000ல் ஒருவருக்குத்தான் இப்படிப் பிறக்கும் எனஅமைச்சர் பதிலளித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications