வடக்கு ஈராக்கில் நுழைய மாட்டோம்: துருக்கி உறுதி
அங்காரா:
அவசியம் ஏற்பட்டால் தவிர ஈராக்கின் வடக்குப் பகுதிக்குள் நுழைய மாட்டோம் என்றுஅமெரிக்காவுக்கு துருக்கி உத்தரவாதம் அளித்துள்ளது.
வடக்கு ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் கிட்டத்தட்ட தனியாகவே ஆட்சி நடத்தி வருகின்றனர்.அவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக் படையினர் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஈராக்கின் எண்ணெய் நகரம் என்று அழைக்கப்படும் கிர்குக் நகரை குர்திஸ் மக்கள்சுற்றி வளைத்துள்ளனர்.
ஆனால் இந்நகரை குர்திஸ் இனத்தவர் கைப்பற்றினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றதுருக்கி எச்சரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா-துருக்கி-குர்திஸ் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கிர்குக் நகரைக் கைப்பற்ற மாட்டோம் என்று குர்திஸ் மக்கள் உறுதி அளித்துள்ளனர். அதுபோல்வடக்கு ஈராக்கினுள் நுழைந்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்று துருக்கியும் உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையே குர்திஸ் மக்கள் வசிக்கும் கலாக் நகரின் மீது ஈராக் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.
""பிரிட்டிஷ் படை திரும்ப வேண்டும்"":
இதற்கிடையே பிரிட்டிஷ் படைகள் போரைக் கைவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்று போரைஎதிர்த்து ராஜினாமா செய்த அந்நாட்டு அமைச்சரான ராபின் குக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேவையே இல்லாத இந்தப் போரினால் பிரிட்டிஷ் படையினர் மேலும் அநியாயமாகக்கொல்லப்படுவதற்குள் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications