வைகோ, நெடுமாறனை விடுவிக்க வீரமணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணிகோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

பொடா சட்டத்தின் கீழ் வைகோவும் நெடுமாறனும் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகி விட்டன.இனியும் அவர்களை அலைக்கழிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் இருவரையும் ஜெயலலிதா விடுவிக்க வேண்டும்.தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திற்கு மதிமுகவுக்கும் பாமகவுக்கும் அழைப்புஅனுப்பவில்லை. அவர்களை அவமதித்துள்ளார்கள். மேலும் வைகோவைத் தாக்கி உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.

எனவே இனியும் அந்தக் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து இரு கட்சிகளும்யோசிக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+